Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, February 28, 2011

முஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்மை ஒரு நடுநிலையாளரின் கருத்து

 திருக்குரானின் அடிப்படையிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளை வைத்தும் 'இஸ்லாம் தீவிரவாதத்தை என்றும் அனுமதிப்பதில்லை' என்று பல அறிஞர்கள் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறார்கள். அப்படி இருந்தாலும், தீவிரவாதம் பற்றிய செய்திகள் வரும்போது முஸ்லிம்கள் பெயர் மட்டும் ஹைலைட் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதால், உளவியல் ரீதியாக  முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இது ஒரு பொதுவான சமூகப் பிரச்சினை என்று கருதப்பட வேண்டும்! இளம் மனங்களில் சந்தேகமும், குழப்பமும் இருந்தால், அது அவர்களது முன்னேற்றத்தை பெருமளவு பாதிக்கும்.

Thursday, February 24, 2011

கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு பதவி உயர்வு - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

சென்னை,பிப்.23:கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007 அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.
இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

Tuesday, February 22, 2011

சிவில் சர்வீஸ் தேர்வு 2011


                                       சமுக மேம்பாடு திட்டம்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (upsc) 2011 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான அட்டவனையை அறிவித்துள்ளது.அதில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 21 / 03 / 2011 (திங்கள்).முதல் கட்ட தேர்வு நடைபெறும் நாள்  12.06.2011 (sunday)

மேலும் விபரங்களுக்கு மற்றும் online registeration செய்வதற்கு இங்கே கிளிக் செயுங்கள் http://upsc.gov.in/  அடுத்து அந்த பக்கத்தில் உள்ள online examination application என்பதை கிளிக் செய்யவும். நீங்களும் பயன் அடைந்து இந்த பக்கத்தை மற்றவர்களும் பார்த்து பயன் பெற ஊக்குவியுங்கள்.
                                                                                                  வெற்றி பெற வாழ்த்துக்கள்

                                                                                                       POPULAR FRONT OF INDIA
                                                                                                                 TRICHY


அனைவர்க்கும் இந்த தகவலை அனுப்பவும் நன்மையை பெற்று கொள்ளவும்

Sunday, February 20, 2011

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது. பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக்கிறார். தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார்.

“வாழுங் கலை சர்வதேச மையம்”, “வேத விஞ்ஞான மகாவித்யா பீடம்” இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இந்தியாவில் மட்டு மல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணைய தளம் விவரித்துக் கொண்டே போகிறது. இணைய தளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005 ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந்தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங்கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார் “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப்பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது.

நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது: அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந்தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் நூலாசிரியர் கேட்டார். அதற்கு அவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள் இதனாலேதான் இப்படி நடக்கிறது என்று பதில் சொன்னார். ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளிவாக இவரது பதிலில் இருந்து உணரலாம். பாகல்பூர் முதல் பீவாண்டி, மீரட், குஜராத், மும்பை வரை நடத்திய கலவரங்கள் போதாது. இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி நூலாசிரியர் லூசே கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல்கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

நூலாசிரியர் லூசே எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். “சில வாரங்களுக்குப் பிறகு நூலாசிரியர் லூசேக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு! “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.

நன்றி : அருணன். நன்றி: கீற்று.
Live Relay of SDPI chennai zonal conference


click here:http://sdpi.in/portal/home

Thursday, February 17, 2011

அந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம் முஸ்லிம்களின் துயர வாழ்க்கை

 

புதுடெல்லி,பிப்.15:ரஸியா பேகம், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டாவைச் சார்ந்தவர். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், துயரச் சம்பவங்களையும் விவரிக்கும்போது உடைந்துபோய் அழுகிறார். கடந்த 24 வருடங்களாக டெல்லி போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறது இவரது குடும்பம். சில தினங்களுக்கு முன்னால் ரோஹினி பகுதியைச் சார்ந்த போலீசார் இவரது மகள் ராணியை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.1750 ஐ பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர்.

Tuesday, February 15, 2011

நினைவலைகளி​ல் ஷாஹித் ஆஸ்மி




ஷாஹித் ஆஸ்மி - மனித நேயமிக்க துணிச்சலான வழக்கறிஞர். அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்கள் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும் அவர்களுக்காக வாதாடியவர்.

தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை துணிவுடன் எடுத்து நடத்தி விடுதலையைப் பெற்றுத் தந்தவர். நீதிக்காக போராடிய அந்த இளைஞரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி அக்கிரமக்காரர்களின் கைக்கூலிகள் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தனர்.

நீதிக்கான போராட்டத்தில் அந்த லட்சிய வீரர் தனது இன்னுயிரை இழந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இவ்வேளையில் அவரைக் குறித்த சில நினைவலைகளை அவருடன் தொடர்புடையவர்களிடமிருந்து பகிர்ந்து கொள்வோம்.

ஷாஹித் ஆஸ்மியின் தாயார் ரிஹானா ஆஸ்மி - இவருடைய கணவர்(ஷாஹிதின் தந்தை) இறந்து பல வருடங்களாகிவிட்டன. ரிஹானா மார்க்கப்பற்றுள்ள பெண்மணி. தனது பேச்சினூடே திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் மேற்கோள்காட்டுவார்.

தனது மகனைக் குறித்து ரிஹானா கூறுகிறார். "நான் எனது மகனை நினைத்து பெருமைப்படுகிறேன். அவனைக் கொன்றவர்கள் கட்டாயம். தூக்கிலேற்றப்பட வேண்டும். இதன் மூலம் எனது மகனுக்கு நீதிக் கிடைக்கவேண்டும்." எனக்கூறிய அவரிடம், உங்கள் மகனை கொலைச் செய்தவர்கள் யார்? எனக் கேட்டபோது, அவர் கூறினார், "ஹேமந்த் கர்காரேயை யார் கொன்றார்களோ? அவர்கள்தான்!" என பதிலளித்தார்.

'உங்கள் மகன் ஷாஹித் ஆஸ்மி கொலைச் செய்யப்பட்டுள்ள சூழலில், அதே வழக்கறிஞர் தொழிலுக்கு ஏன் உங்களது இளைய மகனையும் பணிபுரிய அனுமதித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஹானா, "நான் எனது இறைவனை சந்திப்பதைக் குறித்து பயப்படுகிறேன். உனது மூத்தமகன் கொலைச் செய்யப்பட்டதால் பயந்துபோய் உனது இளைய மகனை பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்காக உழைக்கும் பணியை ஏற்கச் செய்வதிலிருந்து தடுத்தாயா? எனக்கேட்டால் நான் என்னச் செய்வேன்?" என வினா எழுப்பிய ரிஹானா, "அல்லாஹ் எனது இளைய மகனை காப்பாற்றுவான்" என உறுதியுடன் தெரிவித்தார்.


மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் கிராந்தி நகர் சேரிப் பகுதியில் வசிப்பவர் தன்னா. இவர் ஒரு விதவையாவார். ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து நினைவுக்கூறும் பொழுது அவர் முகத்தில் தெரிந்த வருத்தத்தை நம்மால் உணரமுடிகிறது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அவர் கூறுகிறார்: "எனது மகன் ஹேமந்த். அவனுக்கும் இன்னொரு நபருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த நபர் தற்செயலாக இறந்துவிட்டார். போலீசார் எனது மகன் மீது 302-பிரிவின் படி கொலைக் குற்றத்தை சுமத்தினர். நான் ஒரு விதவை. நான் எனது மகனை வழக்கிலிருந்து விடுவிக்க பல வழக்கறிஞர்களையும் அணுகினேன். வழக்கிற்காக என்னிடமிருந்த அனைத்தையும் விற்றதுதான் மிச்சம். எல்லா வழக்கறிஞர்களுமே 'உங்கள் மகனை எங்களால் காப்பாற்ற இயலாது' என கைவிரித்து விட்டனர். இந்நிலையில் ஷாஹித் ஆஸ்மியைக் குறித்து கேள்விப்பட்டு அவரை வெறுங்கையுடன் சென்று சந்தித்தேன்.

ஷாஹித் என்னிடம் இந்த வழக்கில் காசு வாங்காமலேயே வாதாடுகிறேன் எனத் தெரிவித்ததோடு 2006 ஆம் ஆண்டு எனது மகனுக்கு இவ்வழக்கிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தந்தார். எனது மகன் ஹேமந்தைப் போல் ஷாஹிதும் எனக்கு மகன்தான்.

70 அடி பரப்பளவைக் கொண்ட எங்கள் வீட்டில் ஷாஹித் வந்தால் தரையில் உட்காருவார். மாதந்தோறும் எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாகக் கூட எங்களுக்கு நிதியுதவி அளித்தார். அவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். ஏன் எனது மகனைப் போல் நான் கருதிய நேர்மையான மனிதரை கொலைச் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நாங்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தோம். ஆனால், அவருடைய சகோதரர் காலித் ஆஸ்மி தனது சகோதரரைப்போல் எங்களுக்கு உதவிச் செய்வதாக வாக்களித்தார். இப்பொழுது காலிதும் எங்களது மகன்தான். அவரை இறைவன்
காப்பாற்றுவான்." என தெரிவித்தார்.

ஷாஹித் ஆஸ்மி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்ட பொழுது இரண்டு கேள்விகள் மிஞ்சின. ஒன்று. யார் ஷாஹித் ஆஸ்மியின் கொலைக்கு பின்னணியிலிருந்து செயல்பட்டவர்கள்?

இரண்டாவது ஷாஹித் ஆஸ்மியின் பணியை யார் எடுத்து நடத்துவார்?

முதல் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கு விடை அவருடைய இளைய சகோதரர் வழக்கறிஞர் காலித் ஆஸ்மியைத் தவிர வேறு எவரும் விடை தரவில்லை.

ஷாஹித் ஆஸ்மி இறந்து ஒருவாரத்திற்குள் அவரது சகோதரர் காலித் ஆஸ்மி, "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்று செயல்படுவேன்" என அறிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி காலித் ஆஸ்மி தொலைபேசி வாயிலாக அளித்தப் பேட்டியில்; "நான் எனது சகோதரனின் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன். அவரது பணிகளை சவாலாக ஏற்றுக்கொண்டு உரிய பங்களிப்பை செலுத்துவேன். நான் எனது உயிரைக் குறித்து அஞ்சவில்லை. குறிக்கோள்தான் முக்கியமானது. நான் இதற்காக விலைக் கொடுக்க தயாராகிவிட்டேன். இதனைத் தவிர எனது வாழ்க்கையில்
வேறொன்றுமில்லை" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கலான வழக்குகளில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளுக்கெதிராக வாதாடிக் கொண்டிருக்கிறார் அவர்.

தகவல்கள்:twocircles.நெட்
                                                                                                                                நன்றி
                                                                                                                  பாலைவனத்தூது