Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, September 27, 2012

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.
புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.
1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Saturday, September 22, 2012

திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக நடந்த கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

       அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின்   ஆர்ப்பாட்டம்
செப் 22 : திருச்சி மேலசிந்தாமணி  அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக  நபி (ஸல் ) அவர்களை இழிவுபடுத்தும் படத்தை வெளியிட்டதற்கு அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்து சரியாக சுமார் 3 மணிக்கு கண்டன கோசத்துடன் துவங்கியது .மாவட்ட ஜமாத்துல் உலமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  இயக்கங்களின் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் .இதில் 

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் I சபியுல்லாஹ் மற்றும் SDPI இன் மாவட்ட துணை  தலைவர் சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாற்றினர் .  .



பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு: ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் நோட்டீஸ்..!


புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தைக் குறித்து அவதூறான செய்தியை வெளியிட்ட ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அளித்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்தும் தவறான எண்ணத்துடன் அவதூறானச் செய்திகளை வெளியிட்ட 11 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஊடக கட்டுப்பாட்டு குழுவான ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு கே.எம்.ஷெரீஃப் புகாரை அளித்தார். முன்னர் இந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சானல்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், முறையாக அவை பதிலளிக்கவில்லை.

Thursday, September 20, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பிரான்சு பத்திரிகை!

Policeman stands guard outside French satirical weekly "Charlie Hebdo" in Paris after it published controversial cartoons
பாரிஸ்:இஸ்லாத்தின் இறுதித்தூதரும், முஸ்லிம்கள் உயிரினும் மேலானவருமான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலக முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாக பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்று இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உருவாக இருக்கும் கொந்தளிப்பை கவனத்தில் கொண்டு பிரான்சு அரசு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை(வெள்ளிக்கிழமை) தமது தூதரகங்களையும், பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

Wednesday, September 19, 2012

சவூதி இளரவரசர், உமர் சுலைமானை சி.ஐ.ஏ கொலைச் செய்ததா? – சந்தேகத்தை கிளப்புகிறார் ஃபரீத் ஸக்கரியா!

Fareed Zakaria
நியூயார்க்:சவூதி இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முன்னாள் எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் அரசில் உளவுத்துறை தலைவராக பணியாற்றிய உமர் சுலைமான் ஆகியோரின் மரணத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ இருப்பதாக பிரபல இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஃபரீத் ஸக்கரியா கூறியுள்ளார். இத்தகவலை ப்ரஸ் டி.வி வெளியிட்டுள்ளது.
ஃபரீத் ஸக்கரியா அல் ஹகீகா என்ற அரபு தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது.

இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!

சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!
சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.

தீவிரவாத சித்தரிப்பு: புகார்கள் அளிப்பதால் அற்புதங்கள் நிகழ்ந்துவிடாது -அருந்ததி ராய்!

Arundhati Roy
புதுடெல்லி:குறிப்பிட்ட பிரிவு மக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஜனநாயகத்தின் பிழை அல்ல என்று சமூக ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அருந்ததி ராய் கூறியுள்ளார். பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நிகழ்ந்து நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

Tuesday, September 18, 2012

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து அமெரிக்காவிற்கெதிராக போராட்டம்!


Tuesday, September 18th, 2012

சென்னை: முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் Sep 18 மாலை 4 மணியளவில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி பெருமானாரை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான். இதனை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் கூறினால் அது அவரவர் தனிப்பட்ட கருத்து என முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது முஸ்லிம் சமூகம் தங்களுடைய பலத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  மாலை 4 மணியளவில் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

டெல்லியில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம்



பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


அதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் அதனை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

Monday, September 17, 2012

டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ் .டி .பி.ஐ கட்சி ரயில் மறியல் போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து  எஸ் .டி .பி.ஐ  கட்சி ரயில் மறியல் போராட்டம் 

Tuesday, September 11, 2012

உடுப்பியில் முஸ்லிம் மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  சார்பாக கர்நாடக மாவட்டம் உடுப்பியில் முஸ்லிம் மாணவியின்  முக்காட்டை  (scarf ) கிழித்து அந்த பெண் மீது தாக்குதல் நடத்திய ABVP குண்டர்களின் ஈன செயலை கண்டித்து அவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டம்  


Udupi protest

புது டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


புது டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி செப்டம்பர் 06 , 2012 அன்று புது டெல்லியிலுள்ள இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துல்ரஹ்மான் தலைமை தாங்கினார். அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பழங்குடியினர், தலித்துகள்,முஸ்லிம்களை சக்திப்படுத்துதல் என்பது தேசிய கடமை என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் "இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு பிற்படுத்தப்பட்ட-தலித் மக்களின் நிலைமை இங்கு நிலவிய சாதிக் கொடுமைகளால் மிகவும் துயரமானதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை, முஸ்லிம்கள் தங்களது வீடுகளுக்கும், மஸ்ஜிதுகளுக்கும் அழைத்துச்சென்று சமூக ஐக்கியத்தை கட்டியெழுப்பினார்கள். இதற்கு எதிரான உயர் ஜாதியினரின் சூழ்ச்சியே முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாக சித்தரிப்பதன் வாயிலாக தொடர்கிறது." என்றார்.

Eid Milan 6 sep 2012

SDPI VS Congress on Kodakulam Nuclear Plant



Friday, September 7, 2012

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..! மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நிவாரணப்பணியில் பாப்புலர் ப்ரண்ட்...


மதுரை : 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை,விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் ,அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஈடுபட்டது.