Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, April 30, 2012

கூடங்குளம் போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது: ஆம்னஸ்டி!

Kudankulam N-plant issue- Amnesty International plea to PM
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் நடத்தும் அமைதியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் ஒன்று திரளவும், சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது. அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தையும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் அடக்கி ஒடுக்குவதை உடனே நிறுத்தவேண்டும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சார்ந்த பீட்டர் கேட்டன் உள்பட ஆம்னஸ்டியின் மூத்த உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா:காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!

காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!
கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்யூனிச வெறியர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது இவ்வழக்கை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்பிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வழக்கை ஏற்கனவே சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்பொழுது தங்களின் முக்கிய தலைவர்கள் இவ்வழக்கில் சிக்கிவிடுவார்கள் என அஞ்சி அவதூறுகளை பாசிச காவிகளை மிஞ்சும் வகையில் பரப்புரைச் செய்து வருகின்றனர்.

Saturday, April 28, 2012

இஸ்ரேலை கண்டித்து பாராளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற மாபெரும் எழுச்சி பேரணி

உலகில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் பலஸ்தீனில் செய்யும் அக்கிரம்மங்களுக்கு அளவே இல்லை. பலஸ்தீனில் பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்து வருவதோடு பாலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி சிறைவைத்துள்ளது.
தன்னை சுற்றி உள்ள நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டியும் வருகிறது. இஸ்ரேலிய உளவு அமைப்பு இந்தியாவில் ஊடுறுவி ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.


Thursday, April 26, 2012

ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!


        
புதுடெல்லி:ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
Anti-Muslim riots 
வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.

Wednesday, April 25, 2012

கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரிப்பேன் – டெர்ரி ஜோன்ஸ் கொக்கரிப்பு!

terry jones An American Christian preacher
வாஷிங்டன்:ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ பாதிரியார் யூஸஃப் நதகானியை ஈரான் விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, முஹம்மது நபியின் படத்தை வரையப் போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிறிஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய டெர்ரி ஜோன்ஸ்

வெளிநாடு வாழ் தமிழ் முஸ்லிம்கள் கவனத்திற்கு


20 வருடங்களாக சமுதாயத்தின் குரளாகவும் பாசிசத்தை சதிதிட்டங்களை தோலுரித்து காட்டி அனைத்து தரப்பு மக்களையும் விழிப்புணர்வு அடைய  செய்த செய்து கொண்டுறிருக்கிற மேலும் தன்னம்பிக்கை தொடர்கள் குடும்ப உறவுகளை பேணுதல் இன்னும் பல சிறப்பம்சங்கள் அமைந்த  உங்கள் 


தீவிர சந்தா சேகரிப்பு நடைபெறுகிறது .இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் மற்றும் நண்பர்களுக்கும்   உடனே பதிவு செய்து கொள்ளுமாறு  விடியல் குடும்பத்தின் சார்பாக கேட்டு கொள்கிறேன் .



                             

Tuesday, April 24, 2012

இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.

இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.



இலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம் - நூற்றுக்கணக்கானவர்கள் கைது!

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த‌ இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கண்டன உரை நிகழ்த்தும் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம்

Monday, April 23, 2012

தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.எழுச்சி பேரணி தஞ்சை திலகர் திடலில் துவங்கி தஞ்சை ரயில் நிலையம் அருகே நிறைவுற்றது.பேரணி முடிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் இதில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அடிப்படையில் மத்தியில் 10 % இட ஒதிக்கிடும்,தமிழகத்தில் 7 %  இட ஒதிக்கிடும் வழங்க வேண்டும் என்று பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதி
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதி


 .
                             பேரணியில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதி 

Friday, April 20, 2012

ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடன் அஸாஞ்சேயின் முதல் நேர்முகம்!

Assange interviews Hezbollah leader Hassan Nasrallah on new TV show
மாஸ்கோ:அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்வதில் கில்லாடியான விக்கிலீக்ஸின் ஸ்தாபகர்  ஜூலியன் அஸாஞ்ச் தனது வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
அமெரிக்க தூதரக ரகசியங்களை வெளியுலகிற்கு அளித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதே சாகசத்துடன் தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சியிலும் அசத்த துவங்கியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் சவால் விடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வை அஸாஞ்சே தனது முதல் நேர்முகத்திற்கு தேர்ந்தெடுத்தார்.

Monday, April 16, 2012

ஹைதராபாத் கலவரத்திற்கு காரணமான ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஹிந்துத்துவ தீவிரவாதி சிவகுமாருடன் போலீசார்
ஹைதராபாத்:பழைய ஹைதராபாத் நகரில் அனுமன் கோயிலில் மாட்டுக் கறியை வீசிவிட்டு அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு கலவரத்தை உருவாக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் பழைய ஹைதராபாத் நகரில் பஹதூர்பூராவில் உள்ள நந்தி முஸ்லைகுடா பகுதியில் ஹனுமான் கோயிலில் யாரோ ஒரு நபர் மாட்டு இறைச்சியை வீசிவிட்டு சென்றதை தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. போலீசார் கைக்கெட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏப்ரல் மாத மனதோடு மனதாய்


Sunday, April 15, 2012

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம்


                 பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் வரும் ஏப்ரல் 22 ம் தேதி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
                            இதற்காக திருச்சியில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம் ஏப்ரல் 8 ம் தேதி வரகனேரி, முஸ்லிம் தெருவில் நடைபெற்றது. மாலை 6 .50 மணிக்கு பாப்புலர் ப்ரன்ட் திருச்சி மாவட்ட தலைவர் S .அமீர் பாஷா தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது.

Thursday, April 12, 2012

ஹைதராபாத்:வகுப்புவாத கலவரம் குறித்து விசாரணை நடத்த எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:போலீஸ் படையில் ஹிந்துத்துவா சக்திகளின் ஆதிக்கத்தின் தெளிவான ஆதாரம்தான் ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த வகுப்புவாத கலவரம் என்று சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
முஸ்லிம்கள் அதிகமான பகுதிகளில் ஹிந்துத்துவாவாதிகள் தீவிரமாக தாக்குதலை கட்டவிழ்த்து விட்டபொழுது போலீஸ் பார்த்துக்கொண்டு சும்மா நின்றுள்ளது. ஹைதராபாத் போலீஸை ஹிந்துத்துவாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க ஆந்திரபிரதேச முதல்வர் முன்வர வேண்டும். இக்கலவரம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தவேண்டும்.

Friday, April 6, 2012

இஸ்ரேலை கண்டித்து கவிதை எழுதிய குந்தர் க்ராஸ்!

German Nobel literature laureate Günter Grass
பெர்லின்:ஈரானுக்கு எதிராக போர் மிரட்டல் விடுக்கும் இஸ்ரேலை கண்டித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இலக்கியவாதி குந்தர் கிராஸ் கவிதை எழுதியுள்ளார்.
ஜெர்மன் பத்திரிகையில் வெளியான வோட் மஸ்ட் பி ஸெட் என்ற பெயரிலான கவிதையில் க்ராஸ் இஸ்ரேலின் அராஜகத்தை விமர்சித்துள்ளார்.
அணு ஆயுத நாடான இஸ்ரேல் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டும் க்ராஸ், நாசி  ஜெர்மனி யூதர்களுக்கு எதிராக நடத்திய

ரூ.32,000 கோடி மதிப்புள்ள வக்ஃப் நிலத்தில் அரசு முறைகேடு!

ஹைதராபாத்: ஆந்திர வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான 1654 ஏக்கர் நிலம் முறைகேடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திரா வக்ப் அலுவலகம் 

பாப்புலர் ஃப்ரண்ட் இடஒதுக்கீடு பிரச்சார வீடியோ

Sunday, April 1, 2012

எகிப்து அதிபர் தேர்தல்:12 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்த கைராத் அல் ஷாதிர் இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர்!

Egypt's Muslim Brotherhood names Khairat al-Shater as presidential
கெய்ரோ:எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது.

குஜராத் அரசின் செயல்பாடு படு மோசம்:சி.ஏ.ஜி அறிக்கை – எங்கே டைம் பத்திரிகை?

for Rs 17,000 cr losses
புதுடெல்லி:குஜராத் வளர்ச்சியின் நாயகனாக, அடுத்த பிரதமர் வேட்பாளராக வர்ணிக்கப்படும் மாபெரும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(சி.ஏ.ஜி) அறிக்கை குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
“Modi means business but can he lead India” என்ற தலைப்பில் அட்டைப் படத்தில் பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த மோடியின் படத்தை போட்டு கட்டுரை வெளியிட்ட டைம் பத்திரிகை சி.ஏ.ஜியின் அறிக்கை கவனத்தில் படுமா? என்பது நடுநிலையாளர்களின் கேள்வியாகும்.
சி.ஏ.ஜியின் அறிக்கையில் கூறியிருப்பது:
விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.