ஹைதராபாத்: ஆந்திர வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான 1654 ஏக்கர் நிலம் முறைகேடாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திரா வக்ப் அலுவலகம் |
இந்த நில வழக்கு தொடர்பாக அந்நிலத்தை வாங்கிய லான்கோ ஹில்ஸ் நிறுவனமும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களும் மனிகொண்டா கிராமத்தில் உள்ள 32,000 கோடி மதிப்பிலான வக்ஃப் நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்தன அந்த மனுவை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வி.வி.எஸ்.ராவ் மற்றும் ஆர்.கண்டா ராவ் அடங்கிய அமர்வு 1654 ஏக்கர் நிலத்தை தர்கா ஹஜரத் ஹுசைன் ஷா வலி என்கிற வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்றும் அது அரசிற்கு சொந்தமான நிலமல்ல என்றும் தெரிவித்துள்ளதாக வக்ஃப் வாரியத்தின் சார்பாக இந்த வழக்கை நடத்திய மசூத் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திர உள்கட்டமைப்பு வாரியத்தின் கீழ் துபாய் நிறுவனமான ஈமாருக்கு 400 ஏக்கரும், மென்பொருள் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 54.79 ஏக்கரும், விப்ரோ நிறுவனத்திற்கு 30 ஏக்கரும், போலாரிஸ் நிறுவனத்திற்கு 7.89 ஏக்கரும் அளித்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ராஜசேகர ரெட்டியின் அரசு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் நிறுவனமான லான்கோ ஹில்ஸ் நிறுவனத்திற்கு 108.10 ஏக்கர் நிலத்தை அளித்தது.
இவற்றில் லான்கோ நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது கட்டுமான பணியை முடித்து விட்டன மேலும் அரசு ஒதுக்கிய அந்த இடங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் லான்கோ நிறுவனமும் தாங்கள் அந்த இடத்தை முறையாக அரசிடமிருந்து வாங்கியதாக வாதாடியது. ஆனால் உயர்நீதிமன்றம் அனைத்து இடங்களும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து வக்ஃப் வாரியத்தின் தலைவர் சையது குலாம் தெரிவிக்கையில் தாங்கள் இறைவன் அருளால் வெற்றி பெற்றுவிட்டோம் மேலும் இனி வக்ஃப் நிலங்களை குறித்து அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும் இனி அரசு இதுபோல் வக்ஃப் நிலத்தில் முறைகேடு செய்ய துணியாது என்றும் மசூத் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இந்நேரம் .காம்
No comments:
Post a Comment