Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, June 27, 2012

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது த.மு.மு.க கும்பல் கொலை வெறி தாக்குதல்



 வட சென்னை மாவட்டம் லாலா குண்டா பகுதியில் குடிபோதையில் பெண்களை கேலி செய்து இழிவுபடுத்திய தமுமுக வினரை தட்டிக் கேட்டதால் எஸ்.டி.பி.ஐ யினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லாலாகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம். தெருவில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பெண்களை த.மு.மு.க கும்பல் கேலி செய்து வந்தது. அதே போல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அப்பகுதியில் வரும் பெண்களை இடிப்பது, கேலி செய்வது போன்ற ஈன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் பலர் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை அணுகி புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (24/06/2012) அங்கு சென்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர்கள் ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்கள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை தாக்கியதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. 
தாக்குதலுக்கு ஆளான நியமத்துல்லாஹ் மற்றும் நெளஷாத்

இராமநாதபுர​ம் காவல்துறையி​ன் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்​ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்​கள் விடுதலை!



Ramanathapuram Press Conference - 2
காலித் முஹம்மது 
  
பெரியப்பட்டிணம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Tuesday, June 26, 2012

முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்​(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட​​ம்


பேரணி1
சென்னை: 7 வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் பெண்கள் அமைப்பினர் சென்னை, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நேற்று(ஜுன் 24) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின்













 

‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் தந்தைக்கு அறிவுரை!

Mursi's Son- Apply Revolution or Face Resistance
கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார்.
முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நீங்கள் வரம்பு மீறினால் புரட்சி தொடரும். புரட்சிக்கு மாற்றமான முடிவுகளை நீங்கள் எடுத்தால் புரட்சி தொடரத்தான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார வேளையில் முஹம்மது முர்ஸி இவ்வாறு எகிப்திய மக்களிடம் கூறினார்: “எனக்கு தவறு நேர்ந்தால் என்னை திருத்துங்கள்” என்று.

Thursday, June 21, 2012

கத்தீல் சித்தீகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!...

Popular Front Demands CBI Enquiry in jail murder
புதுடெல்லி:குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீல் சித்தீகி கொலைச் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கு பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-சவூதி புலனாய்வு ஏஜன்சிகள் இணைந்து கைது செய்த ஃபஸீஹ் அஹ்மதின் விவகாரத்தில் நிலவும் மர்மத்தை விலக்க மத்திய அரசு தயாராக வேண்டும் என்றும் செயற்குழு கோரிக்கை விடுத்தது.

Friday, June 8, 2012

கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி தமிழகத்தில் தலைமறைவு!


NIA hunts for Goa blast suspects in South
சென்னை:மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை கைதுச்செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறப்புக்குழுவை உருவாக்கியுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். கோவா மாநிலம் மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது.

Wednesday, June 6, 2012

உ.பி கலவரம்:2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்கவேண்டிய சூழல் உருவாகும் – சமாஜ்வாதிக்கு டெல்லி இமாம் எச்சரிக்கை!


Shahi Imam of Jama Masjid, Maulana Syed Ahmed Bukhari

புதுடெல்லி:2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று டெல்லி ஷாஹி இமாம் செய்யத் புகாரி உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சிக்கு கோஸிகாலான் கலவரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஷாஹி இமாம் மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த முன்னால் மொசாத் தலைவர் மீண்டும் எதிர்ப்பு!

Former Israeli spy agency chief warns against attack on Iran
டெல்அவிவ்:ஈரான் மீது இஸ்ரேலால் தாக்குதல் நடத்தப்பட்டால் அதன்மூலம் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் நடக்கும் அபாயம் உள்ளது என்றும் மேலும் டெல்அவிவ் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் முன்னால் மொசாத் தலைவர் டகன் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் ஒரு சிறிய தாக்குதல் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் உருவாக காரணம் ஆகும் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த 5  நிமிடத்தில் போர் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

15-வது வயதில் முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் முடிக்கலாம் – டெல்லி உயர்நீதிமன்றம்!

Muslim girl can marry at 15 if she attains puberty- Delhi high court
புதுடெல்லி:வயதுக்கு வந்த முஸ்லிம் இளம்பெண்கள் 15-வது வயதிலேயே திருமணம் முடிக்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 வயது பூர்த்தியாகாமல் முஸ்லிம் பெண்களுக்கு அவர்களுடைய பெற்றோருடைய அனுமதி இல்லாவிட்டாலும் கணவருடன் வசிக்க இஸ்லாமிய மார்க்கம் அனுமதிப்பதாக நீதிபதிகளான ரவீந்திர பட், எஸ்.பி.மார்க் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.
இதுத்தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டிய உயர்நீதிமன்றம், 15 வயது பூர்த்தியான முஸ்லிம் பெண்களின் திருமணம் செல்லுபடியாகும் என கூறியது.