Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, January 24, 2013

பெரம்பலூர் வி.களத்தூர் பிரச்சனை சம்பந்தமாக பாப்புலர் ஃ ப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய்


வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை 


நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மரக்கடை 


பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து 


கொண்ட மக்களின் ஒரு பகுதியினர்












Thursday, January 3, 2013

திருச்சி SDPI கட்சியின் 29 வது வார்டு கிளையில் புதிய உறுப்பினர்கள



திருச்சி:திருச்சி SDPI கட்சியின் 29 வது வார்டு கிளையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு கூட்டம் கிளை தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் s.s. ரஹமதுல்லாஹ்மற்றும் s.ரபிக் அஹமது மாவட்ட பொது செயலாளர் Y.அப்துல் ரஹீம் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர்.


இதில்  மாவட்ட தொழிற்சங்க தலைவர் பஷீர் அஹமது உடன் தொகுதி நிர்வாகிகள் A.அப்பாஸ் மற்றும் சித்திக் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் 10 நபர்கள் தங்களை SDPI கட்சியின் செயல் வீரர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.இறுதியாக கிளை செயலாளர் நன்றயுரையாற்றினர்.

டெங்கு தடுப்பு முகாம்-திருச்சி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பில் இன்று (28.12.12) பாலக்கரை பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.






Tuesday, January 1, 2013

மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்


வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
 அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! .
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை !
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்! நீண்டதொரு வரலாறு பொருமையுடன் அறிந்து கொள்வொம்..
ஊரும், பெயரும்
மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.
1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.
மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

அவுரங்கசீப்-இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்





அவுரங்கசீப்.இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்களுள் கடைசி.அவருக்குப் பின் சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடையத் துவங்கியது.

வெள்ளைக்காரன் வரலைனா இந்தியா என்ற நாடே உருவாகி இருக்காதுன்னு நம்ம பொது புத்தியில் உருவாகி உள்ள பிம்பம் முதலில் களையப்படவேண்டும்.டெல்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சாம்ராஜ்யங்களுள் மிகப் பெரிது அவுரங்கசீப் ஆண்ட இந்தியா தான்.வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே குமரி வரைக்கும்,மேற்கே ஆப்கானிஸ்த்தான் மற்றும் இன்றைய ஈரானின் ஒரு மாகாணத்தை உள்ளடக்கியும் கிழக்கே அசாம் வரையும் அவரது சாம்ராஜ்யத்தின் எல்லைகள் பரவி இருந்தது.இது நாள் வரையிலான உலகில் தோன்றிய சாம்ரஜியங்களில் முதல் ஐந்து பெரிய சாம்ராஜ்யங்களுள் அதுவும் ஒன்று.தவிர அன்றைய உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30% மக்கள் அவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தனர்.இன்றைய இந்திய மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 15% .

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவுரங்கசீப் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தாமே செய்த குல்லா,உடைகள் போன்றவற்றை விற்று பணம் ஈட்டி கொண்டு இருந்தார் என்று எல்லாம் படித்து இருப்போம்.இதன் மறுபக்கம் இன்னும் சுவாரஸ்யமானது.முஹலாய பேரரசர்களுள் மிகுந்த செல்வம் ஈட்டியவர் அவுரங்கசீப் தான்.அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தரும் அவரே.இருந்தும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார்.இதை விடவும் ஆச்சர்யம்,இன்று உள்நாட்டு உற்பத்தி கணக்கிடும் GROSS DOMESTIC PRODUCTION எனப்படும்GDP 9% ஆக இருக்க அரசாங்கம் திட்டம் தீட்டி 6% ஆக குறைந்து விட்டது என புலம்பி வருகிறது அல்லவா? அவுரங்கசீப் ஆண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மலைக்க வைக்கும் விதமாக 30%ஆக இருந்துள்ளது.இன்று வரை உலகின் எந்த நாடும் இந்த சாதனையை முறியடிக்க இயலவில்லை.சீனாவை விடவும் பலமடங்கு வேகத்தில் அப்போது இந்தியாவின் வளர்ச்சி இருந்து உள்ளது.