அவுரங்கசீப்.இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்களுள் கடைசி.அவருக்குப் பின் சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடையத் துவங்கியது.
வெள்ளைக்காரன் வரலைனா இந்தியா என்ற நாடே உருவாகி இருக்காதுன்னு நம்ம பொது புத்தியில் உருவாகி உள்ள பிம்பம் முதலில் களையப்படவேண்டும்.டெல்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சாம்ராஜ்யங்களுள் மிகப் பெரிது அவுரங்கசீப் ஆண்ட இந்தியா தான்.வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே குமரி வரைக்கும்,மேற்கே ஆப்கானிஸ்த்தான் மற்றும் இன்றைய ஈரானின் ஒரு மாகாணத்தை உள்ளடக்கியும் கிழக்கே அசாம் வரையும் அவரது சாம்ராஜ்யத்தின் எல்லைகள் பரவி இருந்தது.இது நாள் வரையிலான உலகில் தோன்றிய சாம்ரஜியங்களில் முதல் ஐந்து பெரிய சாம்ராஜ்யங்களுள் அதுவும் ஒன்று.தவிர அன்றைய உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30% மக்கள் அவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தனர்.இன்றைய இந்திய மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 15% .
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவுரங்கசீப் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தாமே செய்த குல்லா,உடைகள் போன்றவற்றை விற்று பணம் ஈட்டி கொண்டு இருந்தார் என்று எல்லாம் படித்து இருப்போம்.இதன் மறுபக்கம் இன்னும் சுவாரஸ்யமானது.முஹலாய பேரரசர்களுள் மிகுந்த செல்வம் ஈட்டியவர் அவுரங்கசீப் தான்.அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தரும் அவரே.இருந்தும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார்.இதை விடவும் ஆச்சர்யம்,இன்று உள்நாட்டு உற்பத்தி கணக்கிடும் GROSS DOMESTIC PRODUCTION எனப்படும்GDP 9% ஆக இருக்க அரசாங்கம் திட்டம் தீட்டி 6% ஆக குறைந்து விட்டது என புலம்பி வருகிறது அல்லவா? அவுரங்கசீப் ஆண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மலைக்க வைக்கும் விதமாக 30%ஆக இருந்துள்ளது.இன்று வரை உலகின் எந்த நாடும் இந்த சாதனையை முறியடிக்க இயலவில்லை.சீனாவை விடவும் பலமடங்கு வேகத்தில் அப்போது இந்தியாவின் வளர்ச்சி இருந்து உள்ளது.
அவுரங்கசீப் ஆண்ட வரை இங்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தது மட்டும் அல்ல,அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கப்பம் கட்டியும்,அபராதம் செலுத்தியும் வந்து உள்ளனர்,கடற்கொள்ளையில் ஈடுபட்ட எவெரி-EVERY- என்ற ஆங்கிலேய கொள்ளையனால் ஆத்திரம் அடைந்த அவுரங்கசீப் கிழக்கு இந்திய கம்பெனியின் அனைத்து அதிகாரிகளையும் சிறை பிடித்து கம்பெனியை மூட உத்தரவு இட்டார்.ஆறு லட்சம் பவுண்டுகள் அபராதம் செலுத்தி மன்னிப்பு பெற்று சென்றனர் ஆங்கிலேயர்கள்.
அவர் மிகவும் மத சகிப்புத்தன்மை உள்ளவர்.... அவரால் சகிக்கமுடியாமல் போனது ஜாதியின் அடிப்படையில் மக்களில் உயர்வு தாழ்வு செய்த பார்பனியர்களின் சூழ்ச்சியை தான்... இறைவனுக்கு முன் அணைத்து மனிதர்களும் சரிநிகர் சமம் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தினார்... சின்ன சின்ன ராஜியங்களை வைத்து கொண்டு மாறி மாறி தங்களுக்குள் அடித்துகொண்டிருந்த குரிநில மன்னர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சமாதானமான ஒரு அகண்ட பாரதத்தை அன்றே நிறுவினார்... முஸ்லிம்களிடம் 'ஜகாத்' என்னும் வருமான வரியையும் பிறமத சகோதரர்களிடம் 'ஜிஸ்யா' என்னும் பாதுகாப்பிற்கான வரியையும் முறைப்படி வசூலித்து அரசு கஜானாவை ஆரோக்கியமாக வைத்திருந்த ஒரே மன்னர் அவர்தான்... தன்னுடைய தேவைகளுக்காக தானே கையால் பின்னிய குல்லா மற்றும் சில ஆடைகளை பின்னி விற்று அந்த வருமானத்தில் வாழ்ந்தார்... தான் மரணித்துவிட்டால் தன்னை அடக்கம் செய்ய தேவையான காசை தன் தலையணையின் அடியில் இருக்கும் தன் சேமிப்பில் இருந்து எடுத்து செலவு செய்யுங்கள் என்று சொல்லியிருந்தார் அவ்வாறே செய்யவும் பட்டது, மேலும் தன் அடக்கஸ்தலம் மண்ணோடு மண்ணாக இருக்கவேண்டும் அதை கட்டியெழுப்பகூடாது அங்கே எந்த நினைவிடமும் கூடாது என்று உறுதியாக சொல்லியிருந்தார்
ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் உருவாகிவிட்டதை பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் பார்ப்பனர்களின் உதவியோடு அதனை தகர்த்தது எழுதப்படாத வரலாறு....
No comments:
Post a Comment