Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, July 31, 2012

மேற்காசியாவில் சி.ஐ.ஏவின் உளவுவேலைக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல்!



US sees Israel, tight Mideast ally, as spy threatவாஷிங்டன்:மேற்காசியாவில் தங்களின் உளவு வேலைகளுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக சி.ஐ.ஏ கருதுகிறது. இத்தகவலை அமெரிக்க உயர் உளவுத்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட் ப்ரஸ்செய்தி வெளியிட்டுள்ளது.
பாரம்பரிய நண்பர்களான அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே அவநம்பிக்கை துளிர்விடுவதை இச்செய்தி தெரியப்படுத்துகிறது.
இஸ்ரேலில் சி.ஐ.ஏ உளவாளிகளின் வீடுகள் தாக்கப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறியதைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகியுள்ளது. சி.ஐ.ஏவின் மேற்காசிய விவகாரத்துறை தலைவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகவல் தொடர்பு உபகரணங்களை சேதப்படுத்தியது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட காரணமாகும்.

ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலை: ஐ.நா குழு மியான்மரில்!

UN rights envoy probes ethnic clashes in Myanmar
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து அங்குள்ள நிலைமைகளை நேரடியாக ஆராய ஐ.நா மனித உரிமை அதிகாரிகள் மியான்மருக்கு வருகை தந்துள்ளனர்.
மேற்கு மியான்மரில் உள்ள ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலைகள் குறித்து ஐ.நா மனித உரிமை குழு கவலை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் குழு மியான்மருக்கு வருகை தந்துள்ளது.

நீதிபதிக்கு லஞ்சம்:கர்நாடகா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ கைது!

Karnataka BJP MLA Suresh Babu
ஹைதராபாத்:ஒபுலாபுரம் சுரங்க ஊழலில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய கர்நாடகா மாநில எம்.எல்.ஏ சுரேஷ்பாபு கைது செய்யபட்டுள்ளார்.
ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நீதிபதி பட்டாபிராம ராவுக்கும் மேலும் சிலருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பட்டாபிராம ராவ் மற்றும் 3 நீதிபதிகள் உள்பட 8 பேரை ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில்:வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Monday, July 30, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுக்கும் புத்த சாமியார்கள்!

Monks in Myanmar
லண்டன்:பர்மாவில் புத்த சாமியார்கள் கூட்டுக் கொலைச் செய்யப்படும் முஸ்லிம்களுக்கு வரும் உதவிகளை தடுப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புத்த சாமியார்கள் நேரடியாகவே முஸ்லிம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

Thursday, July 26, 2012

யெமன் மக்கள் தொகையில் 4 இல் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம்!


Yemen now faces a lack of food

ஸன்ஆ:அரசியல் சமூக ஸ்திரத்தன்மையற்ற நிலை நீடிக்கும் யெமனில் 25 சதவீத மக்களும் பட்டினியால் வாடுவதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
அரசியல் பிரிவினர் இடையேயான மோதல்களும், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக துயரும் யெமன் மக்களுக்கு பட்டினியும் பெரும் சுமையாக மாறியுள்ளது.

அஸ்ஸாம் கலவரம்:40 பேர் மரணம் – 2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்!


ethnic riots in Assam state killed at least 40

கொக்ராஜர்/புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துவரும் வகுப்புக் கலவரத்தில் மேலும் எட்டுபேர் பலியாகியுள்ளனர். இத்துடன் மரண எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
நான்கு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
வகுப்புக் கலவரத்திற்கு காரணமான தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. குவஹாத்தி செல்லும் ரெயில்களுக்கும், ரெயில் தண்டவாளங்களுக்கும் பாதுகாப்பாக மத்திய அரசு 2000 படை வீரர்களை நிறுத்தியுள்ளது. மாநில அரசுக்கு உதவ 22500 துணை ராணுவ படையினர் அஸ்ஸாமிற்கு சென்றுள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 18, 2012

அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு 17-07-2012 அன்று நடைபெற்றது.



 ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் A.S.இஸ்மாயில், இந்திய தௌஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர், த மு மு க மூத்த தலைவர் ஹைதர் அலி அ, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ், தேசிய லீக் பசீர் அஹ்மத், சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக், வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிங்கந்தர்




ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர், இஸ்லாமிய விழிபுணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும், பள்ளிவாசல் ஜமாத்தார்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







அமெரிக்க தூதரகம் முற்றுகை - SDPI கட்சி மாநில தலைவர் கே. கே. எஸ். எம். தெஹ்லான் பாகவி அறிவிப்பு







Monday, July 16, 2012

பிரிகேடியர் உஸ்மான் – இந்தியாவின் சின்னம் – ஹாமித் அன்ஸாரி!

Brigadier Mohammad Usman16 Jul 2012

புதுடெல்லி:1947-48 காலக்கட்டத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வீரத்துடன் செயல்பட்டு உயிர் நீத்த பிரிகேடியர் உஸ்மான் இந்தியாவின் சின்னம் என துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி கூறியுள்ளார்.

பிரிகேடியர் முஹம்மது உஸ்மானின் 100-வது பிறந்த நாள் விழா டெல்லியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி உரையாற்றினார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு! – ஆங் சாங் சூகியின் குற்றகரமான மெளனம்!

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு! 15 Jul 2012

டெஹ்ரான்:மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை முற்றிலும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் பெளத்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ள வேளையில் ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தி பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்றுள்ள ஆங் சாங் சூகி இச்சம்பவம் குறித்து குற்றகரமான மெளனம் சாதித்து வருகிறார். 

ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி பங்காஷ் ப்ரஸ் டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் ஆங் சாங் சூகியின் மெளனம் குற்றகரமானது என குற்றம் சாட்டுகிறார்.

Saturday, July 14, 2012

ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி தலையிடும் அரசு அதிகாரிகளுக்கு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்

Islamic movements condemned illegally interfering sharia law Government officials
சென்னை:ஷரிஅத் சட்டத்தில் (முஸ்லிம் தனியார் சட்டம்) அத்துமீறி தலையிடும் தமிழக அரசு அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM அப்துர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூட்டாக தெரிவித்ததாவது; ‘பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சார்ந்த ராஜா முகம்மதுவின் மகன் சாகுல்ஹமீது என்பவருக்கும், அரும்பாவூரை சார்ந்த அப்துல் கபூரின் மகள் யுரேஷா பேகத்திற்கும் கடந்த 25.06.2012 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறும் நேரத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அஹ்மத் உத்தரவின் பேரில் வருவாய் கோட்ட அதிகாரி (ஆர்.டி.ஓ) ரேவதி, சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மா ஆகியோர் காவல் துறையினருடன் அங்கு சென்று இது மைனர் பெண்ணின் திருமணம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Thursday, July 12, 2012

இந்தியா நெக்ஸ்ட் :ஹிந்தி மொழியில் புதிய பத்திரிகை


புது டெல்லி: "இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை ஜூன் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் அஞ்சும் நயீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் ," இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி என்ற போதிலும் அர்த்தமுள்ள நெறிமுறை சார்ந்த ஊடகத்தை நோக்கிய பயணத்தில் இது சீரிய முயற்சி" என்று கூறினார்.
பத்திரிக்கையின் முதல் பிரதிகளை முன்னாள் நீதியரசர் எ எம் அஹ்மதி அவர்கள் என் டி பன்சோலி அவர்களுக்கும பேராசிரியர் சாய் பாபா அவர்களுக்கும் வழங்கினார் .
டெல்லி பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் உட்பட, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த முன்முயற்சியை தங்களது சிறப்புரையில் வெகுவாக பாராட்டினர்
INDIANEXT  Hindi Fortnightly Launching ceremony

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக SCHOOL KIT வழங்கப்பட்டது

20.06.12 அன்று திருச்சி மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் ஏழை,எளிய மாணவ ,மாணவியர்களுக்கு 300ரூபாய் 
மதிப்புள்ள ஸ்கூல் கிட்(School Bag,Notebook,Jamentry box set) பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா மற்றும் SDPI மாவட்ட தலைவர் K. முபாரக் அலி ,பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுபினர்கள் அப்துல் ரஹீம் மற்றும் அப்சல் ஆகியோர் வழங்கினர்.


\

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி நாடுதழுவிய பிரச்சாரம்


Campaign against Witch Hunt

புதுடெல்லி: எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யப்பட‌ வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பல்வேறு விதமான கருத்தாலோசனைகளும்,விவாதங்களும் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும்போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணைக்கைதிகளாகவே இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட அம்மாநில சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஒரு கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதிருந்தும் யு.ஏ.பி.ஏ விதியை காரணம் காட்டி இன்றுவரை அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இப்பேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக ஆர்வலர்களும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக முன்வர வேண்டும்.