Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, July 16, 2012

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு! – ஆங் சாங் சூகியின் குற்றகரமான மெளனம்!

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு! 15 Jul 2012

டெஹ்ரான்:மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை முற்றிலும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் பெளத்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ள வேளையில் ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தி பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்றுள்ள ஆங் சாங் சூகி இச்சம்பவம் குறித்து குற்றகரமான மெளனம் சாதித்து வருகிறார். 

ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி பங்காஷ் ப்ரஸ் டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் ஆங் சாங் சூகியின் மெளனம் குற்றகரமானது என குற்றம் சாட்டுகிறார்.

அண்மையில் மியான்மர் அதிபர் தைன் ஸெய்ன், ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐ.நாவின் அகதிகள் முகாமிற்கு செல்லவேண்டும் என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது. மியான்மரில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை எந்த நாட்டையும் சாராதவர்களாகவும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களாகவும் சித்தரித்து வருகிறது மியான்மர் அரசு.
மியான்மரின் முக்கிய எதிர்கட்சி தலைவரும், நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின்(என்.எல்.டி) தலைவருமான ஆங் சாங் சூகி , பல ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டவர். அவர் அண்மையில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள ஆங் சாங் சூகி மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பதுடன் இவ்விவகாரத்தை தவிர்க்க விரும்புகிறார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆங் சாங் சூகி, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் குடிமக்களா? என்பது தெரியாது என்று கூறினார்.

“அமெரிக்காவும் இவ்விவகாரத்தில் குற்றகரமான மெளனத்தை சாதித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள நாடுகள் சீனாவுடன் நட்புறவாக இருப்பதை தடுக்க அந்நாடுகளுடன் இனிமையாக நடந்து கொள்ள முயற்சிக்கிறது” என்று பங்காஷ் கூறுகிறார்.

“தென்கிழக்கு ஆசியா அமெரிக்காவின் பொருளாதார வரைபடத்தில் மிகவும் தெளிவாக புலப்படாத பகுதியாக மாறி வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை தீரும் வரை மியான்மருக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை” என்று பங்காஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment