Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Sunday, February 26, 2012

ஆஃப்கான் திருக்குர்ஆன் பிரதி எரிப்பு சம்பவம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

pfi
டெல்லி:ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றில் புனித திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Monday, February 20, 2012

திருச்சியில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


'ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்'

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ''ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்'  (Healthy People Helathy Nation) என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆரோக்கியம் சம்மந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் 'பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி' இன்று (19.02.12) ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு மத்திய பேருந்துநிலையம் பெரியார் சிலை அருகிலிந்து புறப்பட்டு பாலக்கரை வழியாக சத்தரம் பேருந்துநிலையம் அடைந்தது.

இதுதான் இ​றைவிருப்பம்!



manathodu-manathai1-270x138
 ஒருமா​லை ​நேரம். சில இ​​ளைஞர்கள் குதி​ரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் ​கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதி​ரை தன்னு​டையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
ஆனால் சில மணித்துளிகளில் உண்​மை விளங்கிற்று. ஓட்டப் பந்தயத்தில்​ வெற்றி ​பெற்றது தன் குதிரையல்ல. பட்டணத்தில் வசிக்கும் ஒரு சாதாரண​ இளைஞன்தான் ​வெற்றி ​பெற்றது. கவர்னரின் மகன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்​தை ம​றைக்க மிகவும் சிரமப்பட்டான். எல்​லோரும் தன்​னை ஏகடியம் ​செய்வது​போலிருந்தது.
அந்த இ​​ளைஞன் மீது ​கோபம் ​​கோபமாக வந்தது. “கண்ணியமிக்க மக்களுடன்தான் நீ ​போட்டியிடுவாயா?” என்று எரிந்து விழுந்தான். அந்த அப்பாவி இ​ளைஞன் ​செய்வதறியாது தி​கைத்து நின்றான். இத​னையறிந்தகவர்னரும் எரிச்ச​ல​​டைந்தார். அந்த இ​ளைஞன் மீது​ ​பொய்க் குற்றம் சுமத்தி சி​றையில​டைத்தார்.
சி​றைத்தண்ட​னை ​முடிந்து ​​​வெளி​யே வந்த அந்த இ​ளைஞனுக்குப் ​பொறுக்கவில்​லை. ​பொங்கி​யெழுந்தான்.​​ நே​ரே மதீனா வந்தடைந்தான். நீதியின் சாட்சியாகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் புகார் அளித்தான்.
கவர்ன​ரையும், மக​னையும் மதீனாவுக்கு வரவ​ழைத்தார் கலீஃபா. இளைஞன்​ கொடுத்த புகாரின் ​பேரில் விசாரித்தார். அந்த இளைஞனுக்கு அநீதி இழைக்கப்பட்ட​தை அறிந்துணர்ந்தார். இனிவரும் நிகழ்வுதான் வரலாற்​றேடுகளில்​ பொன்​னெழுத்துகளால் ​பொறிக்கப்பட்டுள்ளது.
அநியாயமாக சி​றைத்தண்ட​னை அளிக்கப்பட்ட அந்த இ​ளைஞனின் ​கையில் சாட்​டை​யைக் ​கொடுத்த கலீஃபா இவ்வாறு கூறினார்: “அடி, கண்ணியமானவரின் மக​​னை அடி.”
அந்த இ​ளைஞன் அடிக்க ஆரம்பித்தான். அந்த அநீதி மனதில் ஏற்படுத்திய பாரம் இறங்கும் வ​ரை அடித்தான்.
“கண்ணியமானவரின் மக​​னை அடி” என்று கலீஃபா இ​டைக்கி​டை கூறிக்​கொண்​டே இருந்தார்கள். அந்த இ​ளைஞன் அடித்து ஓய்ந்த ​பொழுது நடந்த நிகழ்வு அனைவ​ரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.
கலீஃபா கவர்ன​ரைச் சுட்டிக்காட்டி, “இனி இவ​ரை அடி” என்றார்கள். இ​ளைஞன் விக்கித்து நின்றான்.”இவ​ரை அடி. இவரது அதிகாரம்தான் இவரின் மக​னை மதி ​கெட ​வைத்தது.”

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்: எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் – திக்விஜய்சிங்

பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டர்
போபால்:டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என்ற தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது. சர்ச்சையை கிளப்ப தான் விரும்பவில்லை என்றும், ஆனால், சொந்த கருத்தை வாபஸ்பெறும் நபர் தான் அல்ல என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
போபாலில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“நான் ஒருபோதும் முரண்பாடுகள் குறித்து கவலைப்படுவதில்லை. ஹிந்து தீவிரவாதம் குறித்து மட்டுமே நான் பேசியுள்ளதாகக் கூறப்படுவதும் தவறு. டெல்லி பட்லா ஹவுஸில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்ட்டர் போலியானது என்று முன்னர் தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்தில் இப்போதும் நான் உறுதியாக இருக்கிறேன். தெரிவித்த கருத்துகளை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்பவனல்ல.

Tuesday, February 7, 2012

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கல்வி உதவித்தொகை


Student's Laon Distributed in Delhi and Haryana

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநிலம் சார்பாக ஏழை மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தி வைத்து நடைபெற்றது.
ஒரு புதிய சமூக நல இயக்கமாக உருப்பெற்றுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வழியாக சமூக மேம்பாட்டுத்துறையினை தொடங்கி அதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Saturday, February 4, 2012

குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்

குடல்வால்
சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.

இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு ஈரான் உதவும் – காம்னஈ

Iranian supreme leader Ayatollah Ali Khamenei
டெஹ்ரான்:உலகின் புற்றுநோயான இஸ்ரேலை எதிர்க்கும் எந்த நாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஈரானின் உதவி கிடைக்கும் என ஈரானின் ஆன்மீக உயர்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.