'ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்'
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ''ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' (Healthy People Helathy Nation) என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆரோக்கியம் சம்மந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் 'பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி' இன்று (19.02.12) ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு மத்திய பேருந்துநிலையம் பெரியார் சிலை அருகிலிந்து புறப்பட்டு பாலக்கரை வழியாக சத்தரம் பேருந்துநிலையம் அடைந்தது.
இப்பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் சஃபியுல்லாஹ் தலைமை தாங்கினார் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தலைவர் முபாரக் அலி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பிளாஸ்டிக் அகற்றுவது பற்றிய நோட்டீஸ் விநியோகிப்பது நடைப்பெற்றது. நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கேடர்கள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றார்கள்.
No comments:
Post a Comment