Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, February 7, 2012

டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கல்வி உதவித்தொகை


Student's Laon Distributed in Delhi and Haryana

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநிலம் சார்பாக ஏழை மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்தி வைத்து நடைபெற்றது.
ஒரு புதிய சமூக நல இயக்கமாக உருப்பெற்றுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வழியாக சமூக மேம்பாட்டுத்துறையினை தொடங்கி அதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியை சகோதரர் மெளலானா தல்ஹா அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சகோதரர் ஷர்புதீன் தனது வரவேற்புரையில் உதவித்தொகை வழங்குவதற்கான அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினார். தலை நகரத்திலிருந்து பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் ஏ.செய்யது உரையாற்றும்போது தேசம் சந்தித்து வரும் சவால்கள் பற்றியும் அதனை அதனை மாணவ சமுதாயம் தான் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துக்கூறினார். சமூக விடுதலைக்கான செய்தியை மாணவர்கள் சமூக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜாமியா ஹம்தார்தின் பேராசிரியர் முஹம்மது ஆமீர் உரையாற்றும்போது எந்த ஒரு சமூகம் வலிமையடையவேண்டுமென்றால் அது முதலில் கல்வியில் முன்னேர வேண்டும் என்று கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் மெளலானா கலீமுல்லாஹ் ரஷாதி அவர்கள் முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்துவதற்காக‌ பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டு பணிகளை எடுத்துக்கூறினார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸுஜமான் உரையாற்றும்போது மாணவ சமூகம் தனது சொந்த சமூகத்தின் நிலையை உணர்ந்து அதனை முன்னேற்றுவதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment