Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Friday, May 18, 2012

சத்தியத்தின் முகம்

manathodu-manathai1-270x138     
“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?”
“உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள்.
“அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”
-மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர்.

புஷ் நிரபராதிகளை சித்திரவதைச் செய்தார், ஒபாமா கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்துகிறார் – நோம் சோம்ஸ்கி!

Chomsky- Bush kidnapped & tortured, Obama murders  
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் பிரபல அமெரிக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான நோம் சோம்ஸ்கி.

ஆஃப்கானிஸ்தானிலும், யெமனிலும் அமெரிக்க ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல்களை கடுமையாக கண்டித்த சோம்ஸ்கி, புஷ் அரசு நிரபராதிகளை சித்திரவதைச் செய்து கடத்திய பொழுது, ஒபாமா மக்களை கொன்றொழித்து வருகிறார் என குற்றம் சாட்டுகிறார்.

புஷ்ஷிற்கு எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் கடத்திச்சென்று சிறைக்கூடங்களில் வைத்து சித்திரவதைச் செய்வார். ஒபாமாவோ, ஆட்களை கொலைச் செய்வதால் சிறைக்கூடங்களுக்கு தேவையில்லை. என்று சோம்ஸ்கி ஒரு நேர்முகத்தில் கோபத்துடன் கூறினார்.

அமெரிக்க அறிஞர் அன்வர் அல் அவ்லாகியின் யெமனில் வைத்து கொலைச் செய்ததை சோம்ஸ்கி வன்மையாக கண்டித்தார். யெமனில் அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவ்லாகியை கொலைச் செய்தது தவறு என கூறிய சோம்ஸ்கி, இச்செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ரீதியையும் கண்டித்தார்.

Sunday, May 13, 2012

அன்னையரை போற்றுவோம்​!!!

அன்னையரை போற்றுவோம்​!!!
அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும்.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே! தாயின் சிறந்ததோர் கோயிலுமில்லை! என தாய்மையின் பெருமையை உணர்த்துவதற்கு இவ்வுலகில் பல்வேறு வகையான சொல்லாடல்கள் எடுத்தாளப்படுகின்றன. பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல.
இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது ‘தாய்’ என்ற ஸ்தானமாகும். தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.

Thursday, May 10, 2012

குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்?-உச்சநீதிமன்றம் கேள்வி!

toll gate
புதுடெல்லி:குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்(டோல் ஃபீஸ்) வசூலிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் டோல் ஃபீஸ் குறித்து பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் அனில் ஆர்.தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பாக நேற்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிபதிகள் கூறியது: “எந்த அடிப்படையில், எதற்காக இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது எவ்வளவு காலத்துக்கு வசூலிக்கப்படும் என்ற விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது கட்டுமான நிறுவனத்துக்கும், குத்தகைதாரர்களுக்கும் மட்டும் உரியது என்று இருத்தல் கூடாது.

ஹஜ் மானியம்:நாடகங்களை நிறுத்துங்கள் – எஸ்.டி.பி.ஐ

E.Abubacker
புதுடெல்லி:ஹஜ் மானியத்தின் பெயரால் நடக்கும் அனைத்து நாடகங்களையும் நிறுத்தவேண்டும் என்றும், மானியம் வழங்குவதற்கு பதிலாக மத்திய ஹஜ் கமிட்டியை  புனரமைக்க வேண்டும் என்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.
ஹஜ் புனித பயணிகளுக்கு எவ்வித பலனையும் தராத மானியத்தை நிறுத்துவது ‘முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் செயல்’ என்ற குற்றச்சாட்டை களைய இயலும் என்று இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார்.
ஹஜ் நல்லெண்ணக் குழு என்பது சவூதி-இந்தியா இடையேயான நட்புறவு விவகாரம் என்றும் அதில் நீதிமன்றம் தலையிடுவது கண்டிக்கத் தக்கது என்றும் அபூபக்கர் தெரிவித்தார்.

Wednesday, May 9, 2012

ஈரானுடன் உறவு இந்தியாவுக்கு முக்கியமானது – எஸ்.எம்.கிருஷ்ணா!

Iran a key country for India's energy needs SM Krishna
புதுடெல்லி:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை மீண்டும் குறைப்பதற்கான அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை பொறுத்தவரை மிகவும் முக்கியமானது என்றும் எரிசக்தியை விட இதர காரணிகளையும் இந்தியாவுக்கு பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Tuesday, May 8, 2012

மதுரை சைக்கிள் குண்டுவெடிப்பு: காவல்துறையின் ஒருதலைபட்ச விசாரணை – முஸ்லிம் அமைப்புகள் ஆட்சியரிடம் மனு!

மதுரை சைக்கிள் குண்டு
மதுரை:கடந்த வாரம் மதுரையில் சைக்கிள் குண்டு வெடித்ததையடுத்து குற்றவாளிகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்கள் பகுதிக்கு வந்து விசாரணை என்ற பெயரில் போலீஸார் அத்துமீறுகின்றனர் என்றும், இதனால் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் தங்களைத் தவறாக நினைப்பதாகவும், போலீஸார் ஊடகங்களுக்கு தேவையற்ற செய்திகளைப் பரப்புவதாகவும் கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா தலைமையிலான முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றனர். அங்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலி அக்பரிடம் தங்கள் மனுவைக் கொடுத்தனர்.

ஹிந்து பத்திரிகையின் ஹிந்துத்துவா மனோபாவம்!

Should this story get the front page treatment
ஹைதராபாத்:கடந்த மே மாதம் 3-ஆம் தேதி  தென்னிந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘தி ஹிந்துவின் ஆந்திர மாநில பதிப்பின் முதல் பக்கத்தில் மிக முக்கியத்துவத்துடன் வெளியான செய்தி பலரையும் குறிப்பாக ஹைதராபாத் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு சாதாரண உள்ளூர் செய்தி பிரபலமான ‘தி ஹிந்து’ பத்திரிகையின் முன்பக்கத்தில் ‘Accusedalleged police torture’ என்று வெளியாகியிருந்தது.
ஹைதராபாத் பழையநகரில் முஸ்லிம்-இந்து கலவரத்தைத் தூண்ட ஹனுமான கோயிலில் மாட்டுக் கறியை வீசிய ஹிந்து வாஹினி என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்.நாகராஜு என்பவர்  உள்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதில்  என்.நாகராஜு என்பவர் போலீஸார் தன்னை சித்திரவதைச் செய்ததாக குற்றம் சாட்டிய செய்தியைத்தான் தி ஹிந்து தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு ஹிந்துத்துவா விசுவாசத்தை காட்டியுள்ளது.

Monday, May 7, 2012

இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் (IFF) நடத்திய பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக பல்வேறு சமூக பணிகளை பல ஆண்டுகளாக செய்துவரும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தை உடல் நலம் மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்தது.
சவூதி அரேபியா மட்டுமல்லாது அனைத்து வளைகுடா நாடுகளிலும் உடற்பயிற்சி முகாம்கள், ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கங்...கள், மருத்துவ முகாம்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்தியாவின் பெருமையை சீர்குலைத்த நிகழ்வாகக் தாங்கள் எண்ணிய சம்பவம்?

இந்தியாவின் பெருமையை சீர்குலைத்த நிகழ்வாகக் தாங்கள் எண்ணிய சம்பவம்? - வடிவேல், உளுந்தூர்பேட்டை குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது.. 

"நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன்" என அன்றைய பிரதமர் வாஜபேயியே கவலைப்பட்ட நிகழ்வு.

அந்நிகழ்வுக்காகவே இன்று வரை மோடிக்கு அமெரிக்கா உள்நுழைவு அனுமதி வழங்க மறுத்து வருகிறது.








 THANKS www.inneram.com

ஆடு  நனையு  தேனு ஓணான் கவலை பட்டுச்சாம் 

பாப்ரி மஸ்ஜித்:அத்வானி உள்ளிட்டோர் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் – சி.பி.ஐ!

advani_babri_masjid_1992
டெல்லி:மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானியை விடுவித்ததை எதிர்ப்பது மட்டும் சி.பி.ஐயின் நோக்கமில்லை. மாறாக, அத்வானி உள்ளிட்டோர் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் கட்டாயம் விசாரணைச் செய்யப்பட வேண்டும் என்பதாகும் என்று கூறியுள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான இறை இல்லம் பாப்ரி மஸ்ஜித் கரசேவகர்கள் என்ற ஹிந்துத்துவ கயவர்களால்  இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதுத்தொடர்பான வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக முடிவு இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம் வாக்குவங்கியை ஒழிக்கவேண்டும்! – தொகாடியா மீண்டும் கொக்கரிப்பு!

Vishwa Hindu Parishad leader Praveen Togadia addresses a public meeting hosted by the Hindu Samrakshana Samiti at the Thalipadappu maidan in Kasaragod on Sunday
காஸர்கோடு:இந்தியாவில் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்து ஹிந்து வாக்கு வங்கிகளை உருவாக்கவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார்.
ஹிந்து பாதுகாப்பு சமிதியின் ஏற்பாட்டில் கேரள மாநிலம் காஸர்கோட்டில் நடந்த ஹிந்து சக்தி சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொகாடியா உரை நிகழ்த்தினார்.
தொகாடியா தனது உரையில் கூறியது: ‘ஹிந்துக்கள் உள்ளிட்டோர் அளிக்கும் வரிப்பணத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு சலுகைகளை அரசு வழங்குகிறது. முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அரசியல் தலைவர்கள் அவர்கள் முன்னர் மண்டியிடுகின்றனர். ஹிந்துக்களை இகழும் வகையில் முஸ்லிம்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குவதால் முஸ்லிம் வாக்குவங்கியை ஒழித்துக்கட்ட வேண்டும்.

Saturday, May 5, 2012

மால்கம் X அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் ஒரு மைல் கல்


இஸ்லாமிய கொள்கையை  ஏற்று அதை முன்வைத்து   அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய இஸ்லாமிய சாத்வீ க போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X – Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக  1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால்  சுட்டு கொல்லபட்டார்  சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன்  அண்மையில்  சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால்  யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை  .

தாரிக் இப்னு ஸியாத்.

மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு? ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

Thursday, May 3, 2012

மொழிப் பெயர்த்தலுக்கு அமெரிக்காவில் 17 1/2 ஆண்டுகள் சிறை!

Tarek Mehanna
நியூயார்க்:நீங்கள் அமெரிக்கன் முஸ்லிமா? ஏதேனும் நூலை மொழிப் பெயர்க்கும் திட்டம் இருந்தால் கைவிடுங்கள்! ஜிஹாதில் பங்கேற்க 39 வழிமுறைகள் என்ற நூலை அரபு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிப் பெயர்த்தார் என்ற காரணத்தினால் மாஸேசூட்ஸில் தாரிக் மஹன்னாவுக்கு நீதிமன்றம் 17 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இணையதளத்தில் எவரும் தரையிறக்கம் செய்யும் வகையில் கிடைக்கும் நூல்தான் 39 வழிகள்.
கடந்த 2009-ஆம் ஆண்டு தாரிக் மஹன்னா கைது செய்யப்பட்டு தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Muslim Community in America Increasing Dramatically
வாஷிங்டன்:முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக நடக்கும் வேளையிலும் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள்தொகை மிகவும் அதிகரித்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் தற்பொழுது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், 26 மாநிலங்களில் மர்மோன் என்ற மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45 சதவீதம் அதிகரித்துள்ள இம்மதத்தினர் 61 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். அதேவேளையில் எந்த மதத்தையும் சாராதவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்


மாவீரன் திப்பு

1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

Wednesday, May 2, 2012

சத்தியத்தின் முகம்


manathodu-manathai1-270x138

“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?”
“உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள்.
“அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”
-மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர்.
இடம்: யர்முக் யுத்தம்.
அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று கோரினார். ஜூர்ஜாவை காலித் அவர்கள் சந்தித்தார். ஜூர்ஜா பேச ஆரம்பித்தார்.

பாலிவுட் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கும் இளைஞர்களுக்கு மதுபான பழக்கம்


பாலிவுட்டின் பரிசு!

Films are corrupting the Indian Youth
பாலிவுட் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கும் இளைஞர்களுக்கு மதுபான பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
12-16 வயது இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.59 பிரபல பாலிவுட் திரைப்படங்களை பார்த்த 3956 மாணவர்களை குழுவாக பிரித்து கண்காணித்த பொழுது மிக அதிகமாக மதுபானம் குடிக்கும் காட்சிகளை கொண்ட திரைப்படங்களை பார்த்தவர்கள் இதர திரைப்படங்களை பார்த்தவர்களை விட அதிக மதுபான பழக்கம் இருப்பது தெரியவந்தது. பாலிவுட் திரைப்படங்களில் வரும் மதுபான காட்சிகள் மாணவர்களிடம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு தெரிவிப்பதாக துபாயில் நடந்த இதயநோய் குறித்த சர்வதேச மாநாட்டில் டாக்டர் ஜி.பி.நாஸிர் சுட்டிக்காட்டினார்.