3 May 2012
நியூயார்க்:நீங்கள் அமெரிக்கன் முஸ்லிமா? ஏதேனும் நூலை மொழிப் பெயர்க்கும் திட்டம் இருந்தால் கைவிடுங்கள்! ஜிஹாதில் பங்கேற்க 39 வழிமுறைகள் என்ற நூலை அரபு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிப் பெயர்த்தார் என்ற காரணத்தினால் மாஸேசூட்ஸில் தாரிக் மஹன்னாவுக்கு நீதிமன்றம் 17 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இணையதளத்தில் எவரும் தரையிறக்கம் செய்யும் வகையில் கிடைக்கும் நூல்தான் 39 வழிகள்.
கடந்த 2009-ஆம் ஆண்டு தாரிக் மஹன்னா கைது செய்யப்பட்டு தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.
2004-ம் ஆண்டு யெமனில் இருந்து அமெரிக்காவிற்கு வருகை தந்த தாரிக் பல ஜிஹாதி நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனத்தில் முதல் திருத்தத்தின் அடிப்படையில் குற்றத்தை உடனடியாக தூண்டாத எந்த நூலையும் எழுதலாம்.
1969-ஆம் ஆண்டு யூதர்களையும், கறுப்பு இனத்தவர்களையும் இன ரீதியாக அவமதித்து அவர்களை பழிவாங்கவேண்டும் என்று அழைப்புவிடுத்த நூலை எழுதியவர் மீது அரசு நடவடிக்கை எடுத்து அதனை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்துச் செய்திருந்தது.
மஹன்னாவின் மொழிப்பெயர்ப்பு ஏதேனும் தாக்குதலுக்கு தூண்டுவதாக அரசுதரப்பு வாதிடவில்லை.
No comments:
Post a Comment