Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, October 17, 2012

SDPI TRICHY MATHU OLIPU PRACHARAM PROTEST

பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம்

பூரண மது விலக்கை அமல்படுத்த  கோரி திருச்சியில் SDPI கட்சி   நடத்திய  கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் .
இதில் திரளான  பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் மற்றும் SDPI கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.



Friday, October 5, 2012

மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவில் பிரச்சாரம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 2 மற்றும் 3 ஆகியதேதிகளில் கோவையில் நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில்தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, செயலாளர்கள் ஏ. பைசல்அஹமது, எம். ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் அஸ்கர் இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழுஉறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் யா முகைதீன் மற்றும் ஓ.எம்.ஏ. சலாம்ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, October 4, 2012

மாணவன் தற்கொலை - நீதிக்காக போராட கேம்பஸ் ஃப்ரண்ட் அழைப்பு!


தஞ்சாவூர் மாவட்டம் : பட்டுக்கோட்டை சிவக்கொள்ளையை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பள்ளிக்கொண்டானில் உள்ள பிரபலமான லாரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 25/09/2012 செவ்வாய்கிழமை அன்று காலை பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையைவிட்டு வெளியில் நிறுத்தியதால் மனம் உடைந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவன் வெங்கடேசன் அன்று இரவு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து இறந்த மாணவனின் பெற்றோரை நேரில் சந்தித்து இரங்கலை தெரிவித்துக் கொண்ட தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் Z.முஹம்மது தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி என விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்குடன் மாணவர்களை சித்திரவதை செய்ய 'பனிஷ்மென்ட் ரூம்' என்ற தனியறையமைத்து சித்திரவதைக் கூடமாக செயல்படும் லாரல் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்துவதோடு மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளையும் கைது செய்ய வேண்டும். 

Tuesday, October 2, 2012

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

OCT 02:திருச்சி பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மது விலக்கை அமல்படுத்து ! டாஸ்மாக்கை இழுத்து மூடு! மாபெரும்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில்  மாவட்ட தலைவர் K முபாரக் அலி நிகழ்சிக்கு வருகை தந்த அனைவரையும்  வரவேற்று உ ரையாற்றினார்கள்.எஸ்.டி.பி.ஐ யின் மாநில செயலாளர்  G .அப்துல் சத்தார் அவர்களும் A கமருதீன் BABL மக்கள் மையம் ஒருங்கிணைப்பாளர் அவர்களும்   மதுவின் தீமைகள்   குறித்தும் அதனால் தமிழகம் எந்த அளவிற்கு  கலாச்சாரம் சீர்குலைவையும் தனி மனித வாழ்வு அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதையும் விரிவாக விலக்கி.சிறப்புரையாற்றினார்கள் .

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் S S ரஹமதுல்லாஹ் தொகுத்து வழங்கினார் .மாவட்ட துணை தலைவர் S சம்சுதீன் மற்றும் பொது செயலாளர் X  ஜான் போஸ்கோ அவர்கள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது .







                       

Monday, October 1, 2012

NWF சார்பாக திருச்சியில் நடந்த "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம்

NWF சார்பாக திருச்சியில் நடந்த "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம் 

திருச்சி:அரியமங்கலம் ஆயில் மில் ஜுபிலி மகாலில் NWF சார்பாக "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம் நடைபெற்றது .இதில் சகோதரி M .நபிஷா பானு B A மாநில பொதுசெயலாளர் NWF அவர்களும் .சகோதரி A .ரஜியா பானு ஆலிமா மாநில செயலாளர் NWF அவர்களும்,சிறப்புரையாற்றினார்கள் .NWF திருச்சி மாவட்ட தலைவி சகோதரி M .மெஹராஜ் பானு ஆலிமா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் .