Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, December 31, 2012

SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்


திருச்சி காஜா மலையில்  SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/12/2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கட்சியின் வருங்கால திட்டத்தையும் மேலும் எவ்வாறு கட்சியின் பணியை முன்னெடுத்து செல்வதை பற்றியும் விவாதிக்கபட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கட்சியின் செயல் வீரர் அடையாள அட்டைவழங்கப்பட்டது.

                                                                                 

 






Sunday, December 30, 2012

SDPI கட்சியின் திருச்சி மாவட்டம் புலிவலம் கிளையின் சார்பாக கொடியேற்றம் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

SDPI கட்சியின் திருச்சி மாவட்டம்  புலிவலம் கிளையின் சார்பாக கொடியேற்றம் மற்றும் டெங்கு தடுப்பு  விழிப்புணர்வு  முகாம் 29.12.12அன்று நடைபெற்றது.SDPI கட்சின் திருச்சி மாவட்ட தலைவர் முபாரக் அலி கொடி ஏற்றி தலமையுரையாற்றினார்.SDTU மாநில துணை தலைவர் சம்சுதீன் சிறப்புரையாற்றினார் .



 

Wednesday, December 26, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-சமூக மேம்பாட்டு துறை






பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட சமூக மேம்பாட்டு துறையின் சார்பாக புதுக்குடி அல்-முகமதியா பள்ளிவாசலுக்கு ரூபாய்16000 மதிப்புள்ள சந்தக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் I.சபியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசலின் துணை செயலாளர் முஹம்மத் அலி அவர்களிடம் வழங்கினார்.

Monday, December 24, 2012

SDPI கட்சியின் திருச்சி 29 வார்டு நிர்வாகிகள் தேர்வு


திருச்சி மாநகராட்சி SDPI கட்சியின் கிளை 29 வார்டு நிர்வாகிகள் தேர்வு 21-12-12 அன்று அண்ணா நகரில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர்கள் S.S.ரஹமதுல்லாஹ் ,ரபிக் முஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.


கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டார்கள்.அவர்களின் விபரம்
S.ஷேக் முஜிபுர் ரகுமான் கிளை தலைவர்

M.சஹுபர் சாதிக் அலி கிளை துணை தலைவர்
E.M.
இஸ்மாயில் கிளை செயளாளர்
A.
முஹமது அலி கிளைதுணை செயலாளர்
A.
நாகூர் பிச்சை கிளை பொருளாளர்

ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யபட்டடனர்.மேலும்10 மேற்பட்ட நபர்கள் செயல் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மணப்பாறை இளங்காகுறிச்சி SDPI நிர்வாகிகள் தேர்வு.


மணப்பாறை இளங்காகுறிச்சி SDPI கிளை  நிர்வாகிகள் தேர்வு 23-12-12 அன்று  இளங்காகுறிச்சியில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கே.முபாரக் அலி அவர்களும் மாவட்ட பொருளாளர் பிச்சை கனி அவர்களும் கலந்து   கொண்டனர்.
மாவட்ட தலைவர் முபாரக் அலி கட்சியின் கொள்கைகளையும் கட்டுபாடுகளையும் எடுத்துரைத்தார் .

கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டார்கள்.அவர்களின் விபரம்
A.ராசிக் அலி கிளை தலைவர்
M.தாகா ரசூல் கிளை செயளாளர்
I.உமர் முஹம்மது கிளை பொருளாளர்






ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யபட்டடனர்.மேலும் 20 மேற்பட்ட நபர்கள் செயல் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்

Thursday, November 29, 2012

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமுக மேம்பாட்டு துறையின் சார்பாக திருமண உதவி வழங்கப்பட்டது .


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமுக மேம்பாட்டு துறையின் சார்பாக 29.11.2012 அன்று திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் திருமண உதவியாக ரூ 15000 வழங்கப்பட்டது .இதை மாவட்ட தலைவர் s.அமீர் பாஷா அவர்கள் வழங்கினார்.

Wednesday, November 28, 2012

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சமுக மேம்பாட்டு துறையின் சார்பாக இரு சக்கர மோட்டர் வாகனம் வழங்கப்பட்டது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக திருச்சியில் தொழில் செய்ய ஒரு நபருக்கு இரு சக்கரம் வாகனம் வழங்கப்பட்டது

Thursday, November 8, 2012

மேட்டுப்பாளையத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்: அரசு பேருந்து எரிப்பு!


Mettupalayam-in-Coimbatore

மேட்டுப்பாளையம்:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Wednesday, October 17, 2012

SDPI TRICHY MATHU OLIPU PRACHARAM PROTEST

பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம்

பூரண மது விலக்கை அமல்படுத்த  கோரி திருச்சியில் SDPI கட்சி   நடத்திய  கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் .
இதில் திரளான  பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் மற்றும் SDPI கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.



Friday, October 5, 2012

மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவில் பிரச்சாரம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 2 மற்றும் 3 ஆகியதேதிகளில் கோவையில் நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில்தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, செயலாளர்கள் ஏ. பைசல்அஹமது, எம். ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் அஸ்கர் இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழுஉறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் யா முகைதீன் மற்றும் ஓ.எம்.ஏ. சலாம்ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, October 4, 2012

மாணவன் தற்கொலை - நீதிக்காக போராட கேம்பஸ் ஃப்ரண்ட் அழைப்பு!


தஞ்சாவூர் மாவட்டம் : பட்டுக்கோட்டை சிவக்கொள்ளையை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பள்ளிக்கொண்டானில் உள்ள பிரபலமான லாரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 25/09/2012 செவ்வாய்கிழமை அன்று காலை பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையைவிட்டு வெளியில் நிறுத்தியதால் மனம் உடைந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவன் வெங்கடேசன் அன்று இரவு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து இறந்த மாணவனின் பெற்றோரை நேரில் சந்தித்து இரங்கலை தெரிவித்துக் கொண்ட தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் Z.முஹம்மது தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி என விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்குடன் மாணவர்களை சித்திரவதை செய்ய 'பனிஷ்மென்ட் ரூம்' என்ற தனியறையமைத்து சித்திரவதைக் கூடமாக செயல்படும் லாரல் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்துவதோடு மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளையும் கைது செய்ய வேண்டும். 

Tuesday, October 2, 2012

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

OCT 02:திருச்சி பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மது விலக்கை அமல்படுத்து ! டாஸ்மாக்கை இழுத்து மூடு! மாபெரும்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில்  மாவட்ட தலைவர் K முபாரக் அலி நிகழ்சிக்கு வருகை தந்த அனைவரையும்  வரவேற்று உ ரையாற்றினார்கள்.எஸ்.டி.பி.ஐ யின் மாநில செயலாளர்  G .அப்துல் சத்தார் அவர்களும் A கமருதீன் BABL மக்கள் மையம் ஒருங்கிணைப்பாளர் அவர்களும்   மதுவின் தீமைகள்   குறித்தும் அதனால் தமிழகம் எந்த அளவிற்கு  கலாச்சாரம் சீர்குலைவையும் தனி மனித வாழ்வு அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதையும் விரிவாக விலக்கி.சிறப்புரையாற்றினார்கள் .

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் S S ரஹமதுல்லாஹ் தொகுத்து வழங்கினார் .மாவட்ட துணை தலைவர் S சம்சுதீன் மற்றும் பொது செயலாளர் X  ஜான் போஸ்கோ அவர்கள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது .







                       

Monday, October 1, 2012

NWF சார்பாக திருச்சியில் நடந்த "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம்

NWF சார்பாக திருச்சியில் நடந்த "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம் 

திருச்சி:அரியமங்கலம் ஆயில் மில் ஜுபிலி மகாலில் NWF சார்பாக "வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம் " கருத்தரங்கம் நடைபெற்றது .இதில் சகோதரி M .நபிஷா பானு B A மாநில பொதுசெயலாளர் NWF அவர்களும் .சகோதரி A .ரஜியா பானு ஆலிமா மாநில செயலாளர் NWF அவர்களும்,சிறப்புரையாற்றினார்கள் .NWF திருச்சி மாவட்ட தலைவி சகோதரி M .மெஹராஜ் பானு ஆலிமா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் .இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் .


Thursday, September 27, 2012

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.
புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.
1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Saturday, September 22, 2012

திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக நடந்த கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

       அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின்   ஆர்ப்பாட்டம்
செப் 22 : திருச்சி மேலசிந்தாமணி  அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக  நபி (ஸல் ) அவர்களை இழிவுபடுத்தும் படத்தை வெளியிட்டதற்கு அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்து சரியாக சுமார் 3 மணிக்கு கண்டன கோசத்துடன் துவங்கியது .மாவட்ட ஜமாத்துல் உலமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  இயக்கங்களின் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் .இதில் 

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் I சபியுல்லாஹ் மற்றும் SDPI இன் மாவட்ட துணை  தலைவர் சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாற்றினர் .  .



பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு: ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் நோட்டீஸ்..!


புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தைக் குறித்து அவதூறான செய்தியை வெளியிட்ட ஒன்பது பத்திரிகைகளுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அளித்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்தும் தவறான எண்ணத்துடன் அவதூறானச் செய்திகளை வெளியிட்ட 11 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஊடக கட்டுப்பாட்டு குழுவான ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு கே.எம்.ஷெரீஃப் புகாரை அளித்தார். முன்னர் இந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சானல்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், முறையாக அவை பதிலளிக்கவில்லை.

Thursday, September 20, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பிரான்சு பத்திரிகை!

Policeman stands guard outside French satirical weekly "Charlie Hebdo" in Paris after it published controversial cartoons
பாரிஸ்:இஸ்லாத்தின் இறுதித்தூதரும், முஸ்லிம்கள் உயிரினும் மேலானவருமான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலக முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாக பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்று இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உருவாக இருக்கும் கொந்தளிப்பை கவனத்தில் கொண்டு பிரான்சு அரசு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை(வெள்ளிக்கிழமை) தமது தூதரகங்களையும், பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

Wednesday, September 19, 2012

சவூதி இளரவரசர், உமர் சுலைமானை சி.ஐ.ஏ கொலைச் செய்ததா? – சந்தேகத்தை கிளப்புகிறார் ஃபரீத் ஸக்கரியா!

Fareed Zakaria
நியூயார்க்:சவூதி இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முன்னாள் எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் அரசில் உளவுத்துறை தலைவராக பணியாற்றிய உமர் சுலைமான் ஆகியோரின் மரணத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ இருப்பதாக பிரபல இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஃபரீத் ஸக்கரியா கூறியுள்ளார். இத்தகவலை ப்ரஸ் டி.வி வெளியிட்டுள்ளது.
ஃபரீத் ஸக்கரியா அல் ஹகீகா என்ற அரபு தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது.

இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!

சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்!
சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.

தீவிரவாத சித்தரிப்பு: புகார்கள் அளிப்பதால் அற்புதங்கள் நிகழ்ந்துவிடாது -அருந்ததி ராய்!

Arundhati Roy
புதுடெல்லி:குறிப்பிட்ட பிரிவு மக்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஜனநாயகத்தின் பிழை அல்ல என்று சமூக ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அருந்ததி ராய் கூறியுள்ளார். பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நிகழ்ந்து நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

Tuesday, September 18, 2012

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து அமெரிக்காவிற்கெதிராக போராட்டம்!


Tuesday, September 18th, 2012

சென்னை: முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் Sep 18 மாலை 4 மணியளவில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி பெருமானாரை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான். இதனை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் கூறினால் அது அவரவர் தனிப்பட்ட கருத்து என முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது முஸ்லிம் சமூகம் தங்களுடைய பலத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  மாலை 4 மணியளவில் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

டெல்லியில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம்



பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய் !! எனும் முழக்கத்தோடு இந்தியா முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தி வருகிறது. இப்பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சரியாக 11 .00 மணிக்கு இந்தியா முழுவதும் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


அதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் அதனை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.

Monday, September 17, 2012

டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ் .டி .பி.ஐ கட்சி ரயில் மறியல் போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து  எஸ் .டி .பி.ஐ  கட்சி ரயில் மறியல் போராட்டம் 

Tuesday, September 11, 2012

உடுப்பியில் முஸ்லிம் மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  சார்பாக கர்நாடக மாவட்டம் உடுப்பியில் முஸ்லிம் மாணவியின்  முக்காட்டை  (scarf ) கிழித்து அந்த பெண் மீது தாக்குதல் நடத்திய ABVP குண்டர்களின் ஈன செயலை கண்டித்து அவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டம்  


Udupi protest

புது டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


புது டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி செப்டம்பர் 06 , 2012 அன்று புது டெல்லியிலுள்ள இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துல்ரஹ்மான் தலைமை தாங்கினார். அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பழங்குடியினர், தலித்துகள்,முஸ்லிம்களை சக்திப்படுத்துதல் என்பது தேசிய கடமை என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் "இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு பிற்படுத்தப்பட்ட-தலித் மக்களின் நிலைமை இங்கு நிலவிய சாதிக் கொடுமைகளால் மிகவும் துயரமானதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை, முஸ்லிம்கள் தங்களது வீடுகளுக்கும், மஸ்ஜிதுகளுக்கும் அழைத்துச்சென்று சமூக ஐக்கியத்தை கட்டியெழுப்பினார்கள். இதற்கு எதிரான உயர் ஜாதியினரின் சூழ்ச்சியே முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாக சித்தரிப்பதன் வாயிலாக தொடர்கிறது." என்றார்.

Eid Milan 6 sep 2012

SDPI VS Congress on Kodakulam Nuclear Plant



Friday, September 7, 2012

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..! மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நிவாரணப்பணியில் பாப்புலர் ப்ரண்ட்...


மதுரை : 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை,விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் ,அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஈடுபட்டது.

Wednesday, August 29, 2012

கத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து!-ஆய்வில் தகவல்!

Decline in circumcisions could cost billionsவாஷிங்டன்:அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
கத்னா செய்யாததால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவில் 4 பில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள்: தைவான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்!

Taiwan minister says men should sit down to urinate
தைபே:ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தைவானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரின் கருத்து அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Tuesday, August 21, 2012

காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்...


எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால்  என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்... ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்....


எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான்.2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை.எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது.

ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை.காணவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானிற்கு ஆயுத பயிற்சி எடுக்க சென்று விட்டதாக சொல்லலாம்.அது குறித்து விசாரிக்க இவன் கொண்டு வரபட்டிருந்தான்.

                                 பொதுவாக விசாரணைகள் G செல் என்ற ஒரு திக்கான தகர ரூமில் வைத்து நடத்தப்படும்.கதவுகள் அடைக்கபட்டே இருக்கும்.அந்த வாலிபனுக்கும் அதே ரூமில் விசாரணை.சிரித்த முகத்துடன் நாம் தப்பு செய்யவில்லை என்ற தைரியமும்,படபடப்புமாக இருந்தான்.அவனுக்கு காவலாக நான்.
                                எனது காவல் முடியும் வரை யாரும் விசாரிக்க வர வில்லை.கை விலங்கு இடப்பட்ட நிலையில் சாப்பாடு கொடுக்கும்போதும் இயற்கை அழைப்பின் போதும் மட்டுமே விலங்குகள் அவிழ்த்து விடப்பட்டன.
                                   விசாரணை என்பதை விட அது அந்த ஊரில் வாழும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.ரயில்வேயில் ஒரு கருப்பு நிற தொலைபேசி இருக்குமே அதுதான் இங்கு படு பயங்கரமான ஆயுதமே.அதில் டயல் செய்ய சுற்றும்போது சிறிய அளவில் மின்சாரம் உண்டாகும்.அந்த போனோடு இணைக்கப்பட்ட வயர்கள் அந்த வாலிபனின் ஆணுறுப்பில் இணைக்கப்பட்டது.இப்பொழுது டயல் செய்யும் ஒவ்வொரு முறையும் அவன் ஆணுறுப்பில் பாயும் மின்சாரம் கொடுக்கும் மரண வேதனையை சற்று கற்பனை செய்யுங்கள்.மல வாயில் மிளகாய்த்தூள் இடபட்டதா என்று தெரியவில்லை.ஆனால் அதுவும் நடப்பதுண்டு.


                                  அடுத்த நாளில் நான் வேறு காவலுக்கு சென்ற படியால் மாலை மட்டுமே பார்க்க முடிந்தது.மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.நடக்க முடியாமல் நடந்தான்.அன்று மாலை கமாண்டன்ட் விசாரிப்பதாக அவர் பங்குக்கு வதை செய்தார்.கதவு திறக்கும்போது சார் ஒரே ஒரு தடவை நான் சொல்றதை கேளுங்க என்றபோது நீ சொல்லி நான் கேட்கணுமா என்று முகத்தில் விடப்பட்ட ஒரு அறையில் மூலையில் போய் விழுந்தான்.அழுதுகொண்டே இருந்தான்.ஆறுதலாக பேசி சாப்பாடு கொடுத்து அமைதி செய்தேன்.படிப்பு பற்றி பேசியபோது எனது படிப்புக்காக  INGOU வின் PROSPECTUS வாங்கி தருவதாக உறுதி அளித்தான்.
                               அடுத்த நாள் அவனை விடுதலை செய்தபோது நடக்கமுடியாமல் நடந்து சென்றான்.அவன் வீட்டிலிருந்து பெற்றோர் வந்திருந்தனர்.அவன் அம்மா அழுத அழுகை மறக்கமுடியாதது.அவன் அழுத அழுகையை விட உக்கிரமாக அழுதபடி அழைத்து சென்றனர்.
                                     நான் என் சகாவிடம் நாம் ஒருவனை தீவிரவாதியாக்குகிறோம் என்ற போது அவன் அதற்க்கு இனிமே அந்த ஊரில் எவனும் பாகிஸ்தான் போக மாட்டான்.போனாலும் போகும் முன்னாடி இன்னொருத்தன் நமக்கு சேதி தந்திடுவான் .அதுக்குதான் இந்த அதிர்ச்சி முறை என்றான்.
                                       சில நாட்கள் கழித்து  அந்த வாலிபன் நான் வாயிலில் காவல் பார்க்கும்போது INGOU  PROSPECTUSகொண்டு வந்து கொடுத்தான்.மேலும் அவன் இதை கொடுக்க பலமுறை வந்ததாகவும் வேறு முகங்களை கண்டு பயந்து திரும்பி விட்டதாகவும் சொன்னான்.அவன் ஊரில் ரோந்து பணிக்கு வந்த என்னை பார்த்ததாகவும் சொன்னான்.நீ அப்பவே என்னிடம் பேசி இத கொடுத்திருக்கலாமே என்றேன்.நீங்க மறுபடியும் பிடிச்சிட்டு போய்ட்டா?சொல்லிவிட்டு சென்று விட்டான்.மறுபடி ஒரு நாளும் பார்க்க வாய்ப்புகள் அமையவில்லை.ஆனால் மறக்க முடியாதவன்.



                                   காஷ்மீர் என்றாலே தீவிரவாதம்  முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு?

டிஸ்கி:  பொது மக்களுக்கு பாதுகாப்பை மனதில்  உணர வைக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு ஆப்ரேசனின் குறிக்கோளாகும்.அது  நடப்பதில்லை என்பதும் மாறாக பயமும் வெறுப்பும் தோன்றுகிறது என்பது  கசப்பான உண்மை.

http://tamilmottu.blogspot.in/2012/05/blog-post.html

Monday, August 13, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் சென்னை ஐ நா அலுவலகத்தில் பாப்புலர் ப்ரண்ட் மனு


 மியான்மரில் நடைபெற்றுவரும் முஸ்லிம்களின் இனப்படுகொலை மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப்  இந்தியா தெரிவித்துள்ளது.


கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் முஸ்லிம் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது . இருபதாயிரம் முஸ்லிம்கள் புத்த தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் .

கிட்டத்தட்ட எட்டாவது நூற்றாண்டிலிருந்து அங்கு வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு  குடிஉரிமை  உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் அவர்களை நாடற்றவர்களாக ஆக்கியுள்ளது .

யார் வந்தேறிகள்?

யார் வந்தேறிகள்
அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை. அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை ஏறத்தாழ நூறு பேர் மரணித்துவிட்டனர். நான்கு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

Wednesday, August 8, 2012

எகிப்து:தாக்குதலின் பின்னணியில் மொஸாத் – இஃவானுல் முஸ்லிமீன், ஹமாஸ் குற்றச்சாட்டு!

Muslim Brotherhood blames Mossad for Sinai border attacks
கெய்ரோ/காஸ்ஸா:எகிப்து-காஸ்ஸா எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலின் பின்னணியில் மொஸாத் செயல்பட்டுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன் குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதல் எகிப்தின் புரட்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடந்துள்ளதாக இஃவான் கூறியுள்ளது.
எகிப்து-காஸ்ஸா எல்லைப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்16 பேர் கொல்லப்பட்டனர். காஸ்ஸாவில் இருந்து ஊடுருவிய ஜிஹாதி குழுதான் இத்தாக்குதலை நடத்தியதாக எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சியான மெனா கூறியது. ஆனால், இதனை மறுத்துள்ள காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா, இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.