Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, August 13, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் சென்னை ஐ நா அலுவலகத்தில் பாப்புலர் ப்ரண்ட் மனு


 மியான்மரில் நடைபெற்றுவரும் முஸ்லிம்களின் இனப்படுகொலை மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப்  இந்தியா தெரிவித்துள்ளது.


கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் முஸ்லிம் இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது . இருபதாயிரம் முஸ்லிம்கள் புத்த தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் .

கிட்டத்தட்ட எட்டாவது நூற்றாண்டிலிருந்து அங்கு வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு  குடிஉரிமை  உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் அவர்களை நாடற்றவர்களாக ஆக்கியுள்ளது .


இது விசயத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனே தலையிட்டு மியான்மர் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்விற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் அன்சாரி தலைமையில்,மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராஹீம் என்ற அஸ்கர் மற்றும் முஹம்மத் அலி ஆகியோர் அடங்கிய குழு சென்னையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அதிகாரியை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை (09.08.2012) அன்று சமர்ப்பித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி விஜய் பரத் அவர்கள் இதனை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்தார் .

No comments:

Post a Comment