Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, August 29, 2012

கத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து!-ஆய்வில் தகவல்!

Decline in circumcisions could cost billionsவாஷிங்டன்:அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
கத்னா செய்யாததால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவில் 4 பில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

“ஆண்கள் கத்னா செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஏராளமாகும். இருந்தபோதிலும் அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று டாக்டர் ஆரான் தோபியான் கூறுகிறார்.
அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணிக்கை 1970 களில் 79 சதவீதமாக இருந்தது. 2010-ல் இந்த எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
3 சீரற்ற(random) சோதனைகள் மூலமாக கத்னா செய்வது ஹெச்.ஐ.வி, ஆண்களுக்கு தோல் அழற்சி மற்றும் கருப்பை வாய்ப்புற்று நோய் மற்றும் ஆண்குறி புற்றுநோயை ஏற்படுத்தும் ஹெச்.பி.வி வைரஸ் ஆகியவற்றை குறைப்பது தெரியவந்துள்ளது என்று ஆரான் கூறுகிறார்.
கத்னா சதவீதம் அதிகரித்தால் ஹெச்.ஐ.வி பாதிக்கப்படுவதை குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment