Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, August 2, 2012

புனே குண்டுவெடிப்பு:டிஃபன் பாக்ஸை எடுத்துச் சென்ற தயானந்த் பாட்டீல் கைது!

Dayanand Patil being taken to Kamala Nehru Hospital for full body scan
புனே:மஹராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தை நேற்று பீதியில்ஆழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் டிஃபன்ஸ் பாக்ஸில் வெடிக்குண்டை எடுத்துச் சென்றபொழுது வெடித்ததால் காயமுற்று சிகிட்சை பெற்றுவரும் உள்ளூர் டெய்லரான தயானந்த் பாட்டீல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய பகுதியில் நேற்றிரவு, நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், புனே நகரமே அதிர்ச்சிக்கு உள்ளானது. பாலகந்தர்வா கலையரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் தேனா வங்கி அருகிலும், கார்வாரே சவுக் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வரிசையாக சக்தி குறைந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், குப்பைத் தொட்டியில் ஒரு குண்டும், சைக்கிள் கேரியரில் ஒரு குண்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த குண்டு வெடிப்புகள் நேற்றிரவு 7.28 முதல் 7.35 மணிக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொரு நபர் டிஃபன் பாக்ஸில் வெடிக்குண்டை தூக்கிச் சென்றபொழுது வெடித்ததில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இவர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார். அவரது பெயர் தயானந்த் பாட்டீல். உள்ளூரில் டெய்லராக பணிபுரிகிறாராம்.
இந்நிலையில் தயானந்த் பாட்டீல் அப்பாவி என டிஎன்ஏ என்ற பத்திரிகை கூறுகிறது. தயானந்த் பாட்டீல், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் டிஃபன் பாக்ஸையும், வாட்டர் பாட்டில் பேக்கையும்  விட்டுச் சென்றாராம். சில நிமிடங்கள் கழித்து அதனை எடுத்து வரும்பொழுது பேக் கனமாக இருப்பதை உணர்ந்து திறந்து பார்க்க முயன்றபொழுது குண்டுவெடித்ததாக தெரிவித்தாராம். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இப்பத்திரிகை இச்சம்பவத்தை திசை திருப்புகிறதா? என்பதும் சந்தேகமாக உள்ளது.
மலேகானில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் 2006-ஆம் ஆண்டு நடத்திய குண்டுவெடிப்பில் வெடிக்குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தன. அதே பாணியில்தான் புனேயில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குறைந்த வீரியம் குண்டு டெல்லியில் வெடித்தது. இந்நிலையில் புனே போலீஸ் கமிஷனர் சம்பவம் நிகழ்ந்த ஒரு மணிநேரத்திற்குள் எவ்வித முறையான விசாரணை, புலனாய்வு எதுவும் இல்லாமல் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என ஏன் கூறினார்? என்பது ஆச்சரியமாக உள்ளது.

No comments:

Post a Comment