Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Friday, December 30, 2011

கொரியாவின் கம்யூனிச ராஜவம்ச ஆட்சி!

கொரியாவின் கம்யூனிச ராஜவம்ச ஆட்சி!

29 Dec 2011

முன்பு சோவியத் குறித்த கதை ஒன்று உலாவியது:ஒரு நாள் இரண்டு திருடர்கள் ரஷ்யாவின் க்ரம்ளின் மாளிகையில் நுழைந்தனர். சோசியலிச நாடு என்பதால் மாளிகை முழுவதும் தேடிய பொழுதும் திருடர்கள் இருவருக்கும் கையில் ஒன்றும் கிடைக்கவில்லை. நிராசையுடன் சோர்ந்துபோய் மாளிகையை விட்டு வெளியே வரும் வேளையில் அவர்களின் பார்வையில் இரண்டு தகரப்பெட்டிகள் தென்பட்டன. கிடைத்ததே மிச்சம் என கருதி இரண்டு தகரப் பெட்டிகளையும் தூக்கி தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு சென்றனர். அப்பெட்டிகளை இரண்டையும் ஆர்வத்துடன் திறந்தபொழுது அவற்றில் சில காகிதங்கள் இருந்தன. அக்காகிதங்களில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவுகள் முன்கூட்டியே எழுதிவைக்கப்பட்டிருந்தன.

Wednesday, December 28, 2011

அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாகநபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின்மீதும்மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன்அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.عن ابى هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه و سلم من كان يؤمن بالله و اليوم الآخر فلا يؤذ جاره

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது SDPI




உத்தம பாளையத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு 
மருத்துவமனையில் அனுமதித்தது SDPI  .அதனை பற்றி பத்திரிக்கையில் வந்த 
செய்திகள் 

கேரள அரசை கண்டித்து கோவையில் SDPI ரயில் மறியல்

கேரள அரசை கண்டித்து கோவையில் SDPI ரயில் மறியல் 133 பேர் கைதுபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் செய்ய முயன்ற சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா(எஸ்டிபிஐ) அமைப்பை சேர்ந்த 133 பேர் கைது செய்யப்பட்டனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசை கண்டித்தும், தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் கோவையில் ரயில் மறியல் போராட்டம் 26ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



Monday, December 26, 2011

ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் உறவு:நான் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது – திக் விஜய்சிங்


ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே26 Dec 2011


புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா  ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.

இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில்  செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின்  செயலாளர் திக்விஜய்சிங் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் சமூக  இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் இணைந்து ஹஸாரே  பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் 1983-ல்  ஆர்.எஸ்.எஸ். பணிகளில் நானாஜியின் செயலராக ஹஸாரே இருந்துள்ளார்.

Thursday, December 22, 2011

தீவிரவாத வழக்குகளை முடக்க சங்கபரிவார் சதி செய்கிறது !பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அறிக்கை


‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு

news
புதுடெல்லி:கர்நாடகாவை சேர்ந்த முஹம்மத் ஜரார் சிதிபாபா என்பவர் ‘தி ஹிந்து’ தினசரி நாளிதழின் தலைமை நிரூபர் என்.ராம் மற்றும் செய்தியாளர் பிரவீன் சுவாமி மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளிவந்த ஹிந்து செய்திதாளின் முதல்பக்கத்தில் ‘தலைமறைவான இந்திய முஜாஹிதீன் தலைவர் அலியாஸ் யாசின் பட்கல் 2005-ஆம் ஆண்டின் நகர்ப்புறங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாகவும்  காவல்துறையால்  தேடப்பட்டு வந்த இவர்  2010-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களில் மூலம் தங்கள் ஜிஹாத் இயக்கத்தை மீண்டும்  புதுப்பித்ததாகவும்  இவரது இயற்பெயர் முஹம்மத் ஜரார் சிதிபாபா’ என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

Tuesday, December 20, 2011

முஸ்லிம் வாக்குவங்கியை முற்றிலும் அழித்தொழிப்பதே வி.ஹெச்.பியின் நோக்கம் – தொகாடியா மிரட்டல்

pravin thogadia
கொச்சி:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தடையாக இருப்பது முஸ்லிம் வாக்கு வங்கியாகும் .எனவே அதனை முற்றிலும் அழித்தொழிப்பதே விசுவ ஹிந்து பரிஷத்தின் நோக்கம் என அவ்வமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மிரட்டல் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ப்ரஸ் க்ளப்பில் நடந்த ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் தொகாடியா. அப்பொழுது தொகாடியா கூறியதாவது: ‘இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முஸ்லிம் வாக்கு வங்கியை குறித்தும், கிறிஸ்தவ வாக்கு வங்கியை குறித்தும் பயமாகும். ஆதலால் இந்த வாக்குவங்கியை அழிப்பது அத்தியாவசியமானதாகும். கேரளாவில் பசுவதையை தடைச் செய்யக்கோரும் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு பஜ்ரங்தள் தலைமை வகிக்கும்.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் எனது பங்கும் உண்டு. இம்மாற்றம் நாடு முழுவதும் தேவையாகும்’ என தொகாடியா கூறினார்.

எகிப்து:விடுதலையை எதிர்நோக்கி கருந்தேள் சிறைவாசிகள்

lock-up-deaths
கெய்ரோ:கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் அரபு வசந்தத்தின் புரட்சி பூக்கள் விரிந்த வேளையில், இவையெல்லாம் அறியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அல் அஃஹ்ரப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புரட்சியின் அமளி துமளியில் இந்த அப்பாவிகளை ஆட்சியாளர்கள் மறந்து விடுவார்களோ என்ற கலக்கம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அல் அஃஹ்ரப் என்றால் கருந்தேள் எனபொருள். கெய்ரோவில் பிரசித்திப்பெற்ற லிமன்துரா சிறை கட்டிடத்திற்கு உள்ளே அமைந்துள்ள இன்னொரு தனிச்சிறைதான் அல் அஃஹ்ரப்.

Monday, December 19, 2011

சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை ஊடகங்களே தீர்மானிக்கின்றன - பேரறிஞர் யூஸுப் அல் கர்ளாவி


ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் யார் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
இன்று தொடர்பூடகங்கள் மனிதனது சிந்தனையைநம்பிக்கையை,உளப்பாங்கை கட்டியெழுப்புவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூகங்களை உருவாக்குவதற்கான அடிப்படைகளை ஊடகங்களே இடுகின்றன. எனினும்கவலைக்குரியவிடயம்முஸ்லிம்கள் - அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்கள் - பள்ளிவாயல் கட்டுவதையும் ஸதகா செய்வதையுமே தமது வக்ப் சொத்தின் மூலம் நிறைவேற்ற முடியுமான அமல்கள் என்று நினைக்கின்றனர். மனிதர்களைக் கட்டியெழுப்பும் அல்லது சமூகங்களைக் கட்டியெழுப்பும் ஊடகத் துறையில் கவனம் செலுத்துவதை தேவையற்றது என்று எண்ணுகின்றனர்.
al-Qaradawi
ஊடகத்துறையின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் நோக்கும்போது இத்துறையைக் கட்டியெழுப்பிஅதனை வளர்ச்சியடையச் செய்வதில் சட்ட நிபுணர்கள்கலைத்துறை சார்ந்தோர்,பயிற்றுவிப்பாளர்கள்சிந்தனையாளர்கள்தொழில் நுட்பவியலாளர்கள் என எல்லாத் தரப்புமே இவ்விடயத்தில் பங்கெடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில்இது எமது அன்றாடப் பிரச்சினையாகும்.

இந்திய முஸ்லிம்களில் 3 இல் ஒரு பகுதியினர் நிராசை அடைந்துள்ளனர் – சர்வே


muslims
டெல்லி:இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் 3-ல் ஒரு பகுதியினர் எதிர்காலத்தை குறித்து நம்பிக்கை இழந்துள்ளதாகஆய்வில் தெரியவந்துள்ளது. ஹிந்துக்களில் நான்கில் ஒரு பகுதியினரும், இதர மதத்தவர்களில் 15 சதவீதம் பேரும் இவ்வாறு சிந்திப்பதாக அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்லப் சென்டர் நடத்திய ஆய்வு கூறுகிறது.
பொருளாதார சூழலின் அடிப்படையில் மக்களை 3 பிரிவினராக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பொருளாதார ரீதியாக முன்னணியில் இருப்பவர்கள் வாழ்க்கையை குறித்து நல்ல நம்பிக்கையில் உள்ளனர். மேலும் அடுத்த 5 வருடங்கள் இதே நிலை தொடரும் என அவர்கள் நம்புகின்றனர்.
தங்களுடைய வருமானத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்வதற்கு சிரமம் அடைவதாக ஆய்வில் கலந்துகொண்ட 47 சதவீத முஸ்லிம்களும் தெரிவித்ததாக கல்லப் சென்டரின் இயக்குநர் தாலியா முஜாஹித் கூறுகிறார்.
39 சதவீத ஹிந்துக்களும் தங்களுடைய வருமானத்தில் வாழ்க்கையை ஓட்ட சிரமப்படுகின்றனர். முஸ்லிம்களில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே 3 அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் உள்ளனர். இது ஹிந்துக்களில் 17 சதவீதம் ஆகும். இதர மதத்தவர்களில் ஏழு சதவீதம் பேருக்கு மூன்று அல்லது அதைவிட அதிகமான குழந்தைகள் உள்ளனர்.
வாழ்க்கை நிலவரம் மற்றும் கல்வியில் முஸ்லிம்கள் இதர மதத்தினரை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 1197 முஸ்லிம்கள் உள்பட 9500 இந்தியர்களை ஆய்வுக் குழுவினர் நேரில் சந்தித்து தகவல்களை சேகரித்துள்ளனர்.
நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் இதர நாடுகளில் 134 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தோனேஷியா, பாகிஸ்தானிற்கு அடுத்து இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பொதுத்துறை மற்றும் தனியர் துறைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
THANKS
WWW.THOOTHUONLINE.COM

இந்தியர்கள் எதிர்ப்பு: லண்டன் மைதானத்தில் இருந்து சின்னங்களை அகற்றுகிறது டவ் கெமிக்கல்ஸ்

லண்டன்: இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் எதிர்ப்பு காரணமாக லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து, தனது வர்த்தக சின்னத்தை நீக்குவதற்கு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. 



போபாலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை
 டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் ஆக உள்ளது. இதற்கான அந்த நிறுவனத்தின் வர்த்தக சின்னங்கள் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சின்னங்களை மைதானத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார்.

இந்தியர்கள் எதிர்ப்பு: லண்டன் மைதானத்தில் இருந்து சின்னங்களை அகற்றுகிறது டவ் கெமிக்கல்ஸ்

லண்டன்: இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் எதிர்ப்பு காரணமாக லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து, தனது வர்த்தக சின்னத்தை நீக்குவதற்கு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. 

போபாலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் ஆக உள்ளது. இதற்கான அந்த நிறுவனத்தின் வர்த்தக சின்னங்கள் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சின்னங்களை மைதானத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார்.

சின்னங்களை அகற்ற ஒப்புதல்

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து, தனது வர்த்தக சின்னத்தை நீக்குவதற்கு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக

பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, வர்த்தக சின்னத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் வி.கே மல்ஹோத்ரா, ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்தும், அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
thanks
thatstamil.com

Friday, December 16, 2011

சிறுநீரக கல்லைத் தடுக்கும் எலுமிச்சை!

resize_2011121009334215 Dec 2011

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகைகள் உள்ளன. சிட்ரிக் அமிலம் இருக்கும் பழங்கள், சிட்ரஸ் பழ வகைகள்  என அழைக்கப்படுகின்றன.
சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை, சாத்துக்குடி யில்தான் சிட்ரஸ் அதிகமாக உள்ளது.உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரகக் கல் உருவாவதில் உள்ள பலவித காரணிகளில் முதன்மைக் காரணியாக உள்ளது. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும்  உப்பு, கால்சியத்தின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சை சாறு உதவுகிறது.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வளர்ச்சியை தடுக்க முயற்சி – ஆனந்த் பட்வர்தன்

ஆனந்த் பட்வர்தன்

15 Dec 2011


துபாய்:தலித்துகளை குறித்து தயாரித்த ‘ஜெய் பீம்காம்ரேட்’ என்ற ஆவணத் திரைப்படத்தை திரையிடுவதற்காக துபாய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகைத் தந்துள்ளார் இந்தியாவின் பிரபல ஆவண பட இயக்குநர் ஆனந்த்பட்வர்தன்.

அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் முஸ்லிம், தலித், பழங்குடி இன மக்கள் வளர்ச்சி பெறுவதை தடுக்க முயலுகின்றனர். அது முடியாத சூழலில் அழித்தொழிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.

Thursday, December 15, 2011

இறைவனின் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் குறித்த சான்றுகள் – விஞ்ஞானிகள் தகவல்

A graphic showing traces of collision of particles at Cern
ஜெனீவா:அணு விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக விஞ்ஞான உலகம் மதிப்பீடு செய்யும் ’ஹிக்ஸ்போஸன்’(இதனை இறைவனின் அணுத்துகள் எனஅழைக்கிறார்கள்)இருப்பதற்கான சான்றுகள் தென்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் ஸேணில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் இதுக்குறித்த தகவலை வெளியிட்டனர். தற்பொழுது ’ஹிக்ஸ்போஸன்’ குறித்த சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இனியும் ஒரு வருடகால ஆய்விற்கு பிறகே உறுதியாக கூறஇயலும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Tuesday, December 13, 2011

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம்- பாப்புலர் ப்ரண்ட் பங்கேற்பு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர்
 3ம் தேதி மதுரையில் காந்தி மியூசியம் அரங்கில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் Dr. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் நிறுவனர் டேவிட், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோ. தங்கராஜ், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல்: அ.மார்க்ஸ்


mulla periyar war

கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர் பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலையாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான் இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை ‘எல்லைத் தமிழ்’ என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.

அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம்: மனுவை தள்ளுபடிச் செய்தது உச்சநீதிமன்றம்

syed ahamed
புதுடெல்லி:ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஷேக் அஹ்மத் அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. மேலும் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல் சட்டத்தில் கூறப்படுவதற்கு முரணாக அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஆளுநர் அந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரர் கமால் நயன் பிரபாகரின் கோரிக்கையாகும்.

Sunday, December 11, 2011

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி

donna -isvec-police
ஸ்டாக்ஹோம்:டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.