Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, December 19, 2011

இந்திய முஸ்லிம்களில் 3 இல் ஒரு பகுதியினர் நிராசை அடைந்துள்ளனர் – சர்வே


muslims
டெல்லி:இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் 3-ல் ஒரு பகுதியினர் எதிர்காலத்தை குறித்து நம்பிக்கை இழந்துள்ளதாகஆய்வில் தெரியவந்துள்ளது. ஹிந்துக்களில் நான்கில் ஒரு பகுதியினரும், இதர மதத்தவர்களில் 15 சதவீதம் பேரும் இவ்வாறு சிந்திப்பதாக அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்லப் சென்டர் நடத்திய ஆய்வு கூறுகிறது.
பொருளாதார சூழலின் அடிப்படையில் மக்களை 3 பிரிவினராக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பொருளாதார ரீதியாக முன்னணியில் இருப்பவர்கள் வாழ்க்கையை குறித்து நல்ல நம்பிக்கையில் உள்ளனர். மேலும் அடுத்த 5 வருடங்கள் இதே நிலை தொடரும் என அவர்கள் நம்புகின்றனர்.
தங்களுடைய வருமானத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்வதற்கு சிரமம் அடைவதாக ஆய்வில் கலந்துகொண்ட 47 சதவீத முஸ்லிம்களும் தெரிவித்ததாக கல்லப் சென்டரின் இயக்குநர் தாலியா முஜாஹித் கூறுகிறார்.
39 சதவீத ஹிந்துக்களும் தங்களுடைய வருமானத்தில் வாழ்க்கையை ஓட்ட சிரமப்படுகின்றனர். முஸ்லிம்களில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே 3 அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் உள்ளனர். இது ஹிந்துக்களில் 17 சதவீதம் ஆகும். இதர மதத்தவர்களில் ஏழு சதவீதம் பேருக்கு மூன்று அல்லது அதைவிட அதிகமான குழந்தைகள் உள்ளனர்.
வாழ்க்கை நிலவரம் மற்றும் கல்வியில் முஸ்லிம்கள் இதர மதத்தினரை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 1197 முஸ்லிம்கள் உள்பட 9500 இந்தியர்களை ஆய்வுக் குழுவினர் நேரில் சந்தித்து தகவல்களை சேகரித்துள்ளனர்.
நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் இதர நாடுகளில் 134 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தோனேஷியா, பாகிஸ்தானிற்கு அடுத்து இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பொதுத்துறை மற்றும் தனியர் துறைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
THANKS
WWW.THOOTHUONLINE.COM

No comments:

Post a Comment