Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, September 18, 2012

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து அமெரிக்காவிற்கெதிராக போராட்டம்!


Tuesday, September 18th, 2012

சென்னை: முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் Sep 18 மாலை 4 மணியளவில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி பெருமானாரை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான். இதனை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் கூறினால் அது அவரவர் தனிப்பட்ட கருத்து என முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது முஸ்லிம் சமூகம் தங்களுடைய பலத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  மாலை 4 மணியளவில் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

இதில் கீழ் கண்ட் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கெடுக்கவுள்ளன:
1. தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)
4. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
5. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்
6. இந்திய தவ்ஹீத் ஜமாத்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. மனித நேய மக்கள் கட்சி
9. தேசிய லீக்
10. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
11. இந்திய தேசிய லீக்
12. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்
13. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
14. தமிழ் மாநில தேசிய லீக்
15. தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
16. சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை
17. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
18. ஜம்மியத்துல் உலமா ஹிந்த் (அர்சத் மதனி)
19. ஜம்யத்துல் உலமா ஹிந்த் ( மஹ்மூத் மதனி)
20. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
21. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்
22. இஸ்லாமிய இலக்கிய கழகம்
23. ஐக்கிய சமாதானப் பேரவை
24. ஷரீயத் பாதுகாப்பு பேரவை

No comments:

Post a Comment