Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, February 20, 2012

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர்: எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன் – திக்விஜய்சிங்

பாட்லாஹவுஸ் போலி என்கவுண்டர்
போபால்:டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என்ற தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது. சர்ச்சையை கிளப்ப தான் விரும்பவில்லை என்றும், ஆனால், சொந்த கருத்தை வாபஸ்பெறும் நபர் தான் அல்ல என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
போபாலில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“நான் ஒருபோதும் முரண்பாடுகள் குறித்து கவலைப்படுவதில்லை. ஹிந்து தீவிரவாதம் குறித்து மட்டுமே நான் பேசியுள்ளதாகக் கூறப்படுவதும் தவறு. டெல்லி பட்லா ஹவுஸில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்ட்டர் போலியானது என்று முன்னர் தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்தில் இப்போதும் நான் உறுதியாக இருக்கிறேன். தெரிவித்த கருத்துகளை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்பவனல்ல.

பல்வேறு தீவிரவாதச் செயல்களில் சங்க பரிவார அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அது பல வழக்குகளில் வெளிப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைத் (சிமி) தடை செய்ய வேண்டும் என்று கோரியவனும் நான்தான்.
ஹிந்து தீவிரவாதம் குறித்த விமர்சனத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத்தான் நான் குற்றம்சாட்டியுள்ளதாகக் கூறுபவர்கள், மத்தியப்பிரதேச முதல்வராக இருந்தபோது சிமி, பஜ்ரங் தள் ஆகிய இயக்கங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததை வசதியாக மறந்து விடுகிறார்கள். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சிமியை மட்டுமே தடை செய்தது” என்றார் திக்விஜய் சிங்.

No comments:

Post a Comment