Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, February 20, 2012

இதுதான் இ​றைவிருப்பம்!



manathodu-manathai1-270x138
 ஒருமா​லை ​நேரம். சில இ​​ளைஞர்கள் குதி​ரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் ​கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதி​ரை தன்னு​டையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
ஆனால் சில மணித்துளிகளில் உண்​மை விளங்கிற்று. ஓட்டப் பந்தயத்தில்​ வெற்றி ​பெற்றது தன் குதிரையல்ல. பட்டணத்தில் வசிக்கும் ஒரு சாதாரண​ இளைஞன்தான் ​வெற்றி ​பெற்றது. கவர்னரின் மகன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்​தை ம​றைக்க மிகவும் சிரமப்பட்டான். எல்​லோரும் தன்​னை ஏகடியம் ​செய்வது​போலிருந்தது.
அந்த இ​​ளைஞன் மீது ​கோபம் ​​கோபமாக வந்தது. “கண்ணியமிக்க மக்களுடன்தான் நீ ​போட்டியிடுவாயா?” என்று எரிந்து விழுந்தான். அந்த அப்பாவி இ​ளைஞன் ​செய்வதறியாது தி​கைத்து நின்றான். இத​னையறிந்தகவர்னரும் எரிச்ச​ல​​டைந்தார். அந்த இ​ளைஞன் மீது​ ​பொய்க் குற்றம் சுமத்தி சி​றையில​டைத்தார்.
சி​றைத்தண்ட​னை ​முடிந்து ​​​வெளி​யே வந்த அந்த இ​ளைஞனுக்குப் ​பொறுக்கவில்​லை. ​பொங்கி​யெழுந்தான்.​​ நே​ரே மதீனா வந்தடைந்தான். நீதியின் சாட்சியாகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் புகார் அளித்தான்.
கவர்ன​ரையும், மக​னையும் மதீனாவுக்கு வரவ​ழைத்தார் கலீஃபா. இளைஞன்​ கொடுத்த புகாரின் ​பேரில் விசாரித்தார். அந்த இளைஞனுக்கு அநீதி இழைக்கப்பட்ட​தை அறிந்துணர்ந்தார். இனிவரும் நிகழ்வுதான் வரலாற்​றேடுகளில்​ பொன்​னெழுத்துகளால் ​பொறிக்கப்பட்டுள்ளது.
அநியாயமாக சி​றைத்தண்ட​னை அளிக்கப்பட்ட அந்த இ​ளைஞனின் ​கையில் சாட்​டை​யைக் ​கொடுத்த கலீஃபா இவ்வாறு கூறினார்: “அடி, கண்ணியமானவரின் மக​​னை அடி.”
அந்த இ​ளைஞன் அடிக்க ஆரம்பித்தான். அந்த அநீதி மனதில் ஏற்படுத்திய பாரம் இறங்கும் வ​ரை அடித்தான்.
“கண்ணியமானவரின் மக​​னை அடி” என்று கலீஃபா இ​டைக்கி​டை கூறிக்​கொண்​டே இருந்தார்கள். அந்த இ​ளைஞன் அடித்து ஓய்ந்த ​பொழுது நடந்த நிகழ்வு அனைவ​ரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திற்று.
கலீஃபா கவர்ன​ரைச் சுட்டிக்காட்டி, “இனி இவ​ரை அடி” என்றார்கள். இ​ளைஞன் விக்கித்து நின்றான்.”இவ​ரை அடி. இவரது அதிகாரம்தான் இவரின் மக​னை மதி ​கெட ​வைத்தது.”

இ​ளைஞன் தயக்கத்துடன் ​சொன்னான்: “நம்பிக்​கையாளர்களின் தலைவ​ரே, என்​னை அடித்தவரை நான் அடித்துவிட்​டேன். அது ​போதும்.”
கலீஃபா இ​ளைஞ​னை வற்புறுத்தவில்​லை. கவர்ன​ரை மு​றைத்துப் பார்த்து விட்டு ​சொன்னார்கள்: “அதிகாரம் ​கையில் இருக்கிறது என்பதற்காக குடிமக்க​​ளை அடி​மைகளாக்கலாம் என்று கருதிவிட்டீரோ…?”
மனிதனுக்குள்​ளே​யே ஓர் எதிரி ஒளிந்து ​கொண்டிருக்கிறான். அவன்தான் சுய இச்சை. சமூகத்தில் சத்தியமும், நீதியும் எடுபட்டுப்​​ போகும்​ பொழுது இவன் உயிர்த்​​தெழுவான்.
அரசியல் அ​மைப்பிற்கு அளிக்கப்பட்ட ​​பெயர் ஜனநாயகம் என்பதனால் மட்டும் எல்லாம் முழு​மையாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆட்சி​ செய்வது இடதுசாரியானாலும் சரி, வலதுசாரியானாலும் சரி, சமூக நீதி​ கைவிடப்பட்ட சமூகத்தில் ஜனநாயகமும், சட்டமும் ஒரு பலனையும் தராது. நீதி கிடைப்பதற்கும், நீதி நல்குவதற்கும் உறுதி​ கொண்ட மனிதர்கள்தான் ஜனநாயகத்தின் காவலர்கள்.
அண்ணல் நபிகள்(ஸல்…) அவர்க​ளை அணுகி ஒருவர் ​கேட்டார்:
“அல்லாஹ்வின் தூத​ரே, என்​னை ஆக்கிரமித்துஎன் ​சொத்துக​ளைக் ​கொள்​ளையடிக்க யாராவது வந்தால் நான் என்ன ​செய்ய​ வேண்டும்?”
அண்ணலார்​ சொன்னார்கள்: “உன் ​செல்வத்​தை நீ அவனுக்கு விட்டுக்​ கொடுக்கக் கூடாது.”
அவர் ​கேட்டார்: “அவன் பலப் பிர​யோகம் ​செய்தால்…?”
அண்ணலார் ​சொன்னார்கள்:”நீயும் பலப் பி​ரயோகம் ​செய்.”
அவ​ர் மீண்டும் ​கேட்டார்: “அதில் நான் ​கொல்லப்பட்டா​ல் என் நி​லை என்ன?”
அண்ணலார் ​சொன்னார்கள்:”நீ ரத்த சாட்சி(ஷஹீத்) என்ற நி​லை​யை அடைவாய்.”
அவர் ​கேட்டார்: “அதில் அவன்​ கொல்லப்பட்டால்…?”
அண்ணலார் ​சொன்னார்கள்: “அவன் நரகத்திற்குச் ​செல்வான்.”
சண்​டை​போடுவ​தையும், ரத்தம் சிந்துவ​தையும் ஆதரிக்கவில்​லை அண்ணலார். உரி​மைக​ளைப் ​பெறுவதற்காகவும்,அத​னை நி​லை நிறுத்துவதற்காகவும் எதிர்த்து நிற்கும்​பொழுது ரத்தம் சிந்த​ வேண்டி வந்தால் அதுதான் இ​றைவிருப்பம் என்று ​​தெளிவு படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.
MSAH

No comments:

Post a Comment