16 Jul 2012
புதுடெல்லி:1947-48 காலக்கட்டத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வீரத்துடன் செயல்பட்டு உயிர் நீத்த பிரிகேடியர் உஸ்மான் இந்தியாவின் சின்னம் என துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி கூறியுள்ளார்.
பிரிகேடியர் முஹம்மது உஸ்மானின் 100-வது
பிறந்த நாள் விழா டெல்லியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி
உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “ராணுவத்தின் உயர்ந்த
பதவியில் இருந்த உஸ்மான் பாகிஸ்தானுடன் நடந்த போரின்போது காஷ்மீரின்
நெளஷேரா பகுதியில் ஆவேசத்துடன் போரிட்டார். இதனால் பாகிஸ்தானிடம் இழந்த
ஜாங்கர் பகுதியை மீண்டும் இந்தியா கைப்பற்றியது” என்று குறிப்பிட்டார்.
இந்தியா-பாக். போரின் போது உஸ்மானின் வீர தீரச் செயல்களுக்காக அவருக்கு “மஹா வீர சக்ரா விருது” வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தலைமைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment