31 Jul 2012
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து அங்குள்ள நிலைமைகளை நேரடியாக ஆராய ஐ.நா மனித உரிமை அதிகாரிகள் மியான்மருக்கு வருகை தந்துள்ளனர்.
மேற்கு மியான்மரில் உள்ள ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலைகள் குறித்து ஐ.நா மனித உரிமை குழு கவலை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் குழு மியான்மருக்கு வருகை தந்துள்ளது.
மியான்மர் அதிபர் தைன் ஸைனை சந்தித்த பிறகு தாமஸ் ஓஜியா க்விண்டானாவின் தலைமையிலான ஐ.நா குழு ராக்கேன் சென்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறும்.
பல மாதங்களாக மியான்மர் ராக்கேனில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இனப் படுகொலைகளில் 700 முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரம் கூறுகிறது.
No comments:
Post a Comment