புதுடெல்லி: எவ்வித குற்றமும் நிரூபணமாகாமல் நாடு முழுவதும் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ள இருக்கின்றது. இந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பல்வேறு விதமான கருத்தாலோசனைகளும்,விவாதங்களும் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது.
சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உற்று நோக்கும்போது இந்தியாவில் பல சிறைச்சாலைகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக விசாரணைக்கைதிகளாகவே இருந்து வருகின்றனர். மேலும் அவர்களது வழக்குகள் தொடர்பான் விசாரணைகள் காலம் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட அம்மாநில சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஒரு கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதிருந்தும் யு.ஏ.பி.ஏ விதியை காரணம் காட்டி இன்றுவரை அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இப்பேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக ஆர்வலர்களும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதற்காக முன்வர வேண்டும்.
நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் மாபெரும் பிரச்சாரத்தை நடத்த இருக்கின்றது. துண்டு பிரசுரங்கள் வழங்குவது மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்ன பிற நிகழ்ச்சிகள் வாயிலாகவும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் இருந்து துவங்க இருக்கும் இப்பிரச்சாரம் செப்டம்பர் 15 வரை நடைபெறும். சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களுக்கு தேவையான அளவு சட்ட உதவிகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும்.
கடந்த மாதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்ட பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் பணிகள் மீலாய்வு செய்யப்பட்டது. அதில் இப்பிரச்சாரம் நல்ல வெற்றியை அடைந்திருப்பதாக கண்டறியப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த பல்லாயிறக்கணக்கான குழந்தைகளின் கனவை நனவாக்கும் விதத்தில் இப்பிரச்சாரம் அமைந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் கல்வியை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட எத்தனையோ குழந்தைகள் கண்டறியப்பட்டு பாப்புலர் ஃப்ரண்டின் முயற்ச்சியால் மீண்டும் பள்ளியில் சேர்கப்பட்டனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் என அனைத்து மாநிலங்களிலும் சேர்த்தும் மொத்த 1 லட்சத்திற்கும் அதிகான இலவச ஸ்கூல் கிட் வழங்கப்பட்டிருக்கிறது.
வருகின்ற ஆக்ஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சுதந்திர தின அணிவகுப்பை நடத்துமாறும் அது தொடர்பான அனுமதிகளை மேற்கொள்ள கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டு நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இன்றைய ஊடகங்கள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை இச்செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எவ்வித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமலும், அரசியல் உள் நோக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செயப்பட்ட பிற இயக்கங்களோடு தொடர்பு படுத்த முயற்சிகளை உளவுத்துறையினர் மேற்கொண்டு வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வரும் சமூக இயக்கங்களுக்கு எதிராக இத்தகைய சதிச்செயல்கள் நடைபெற்று வருவதை அறிய முடிகின்றது.
மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக உடனே தலையிட்டு அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் பாப்புலர் ஃப்ரண்ட் மீது குற்றம் சுமத்தி வரும் உளவுத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களின் ஒரு பகுதியினர் பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு செய்திகளை வெளியிடும் போது அதற்கான உரிய ஆதாரங்களை வெளியிடாமல் ஒருசார்பாக நடந்து கொள்ளும் விதம் தற்போது வாடிக்கையாகிவிட்டது. ஊடகங்களின் இத்தகைய செயல்கள் பத்திரிகை தர்மத்தை மீறும் செயலாகும் என இச்செயற்குழு கண்டிக்கிறது. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு செய்திகளை வெளியிட்ட 13 பத்திரிகைகள் மற்று தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் பிறஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையிலும், உளவுத்துறையிலும் பணியாற்றும் சில அதிகாரிகள் வேண்டுமென்றே முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் இயக்கங்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். அப்பேற்பட்ட அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இச்செயற்குழு கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் கே.பி.ஷரீஃப், முஹம்மது காலித் (மணிப்பூர்), முஹம்மது ஷஹாபுதீன் (மேற்கு வங்காளம்), கலீமுல்லாஹ் சித்தீகி (புதுடெல்லி), ஏ.எஸ். இஸ்மாயில் (தமிழ் நாடு), யாசிர் ஹஸன் (கர்நாடகா), கரமனா அஷ்ரஃப் மெளலவி (கேரளா), பேராசிரியர் பி.கோயா (கேரளா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment