19 Apr 2012
மாஸ்கோ:அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்வதில் கில்லாடியான விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் தனது வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
அமெரிக்க தூதரக ரகசியங்களை வெளியுலகிற்கு அளித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதே சாகசத்துடன் தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சியிலும் அசத்த துவங்கியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் சவால் விடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வை அஸாஞ்சே தனது முதல் நேர்முகத்திற்கு தேர்ந்தெடுத்தார்.
பாலியல் வழக்கில் பிரிட்டனில் வீட்டுக்காவலில் இருக்கும் அஸாஞ்சே வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடன் நேர்முகத்தை நடத்தினார்.
ரஷ்யாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்.டி சேனலுக்காக தொலைக்காட்சியில் அஸாஞ்சே தோன்றினார்.
‘உலகம் நாளை’ என்ற பெயரிலான நேர்முக நிகழ்ச்சியில் ஹஸன் நஸ்ருல்லாஹ்வை ‘அசாதாரணமான ஆளுமை’ என்று அஸாஞ்சே புகழ்ந்தார்.
No comments:
Post a Comment