பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் வரும் ஏப்ரல் 22 ம் தேதி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சியில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம் ஏப்ரல் 8 ம் தேதி வரகனேரி, முஸ்லிம் தெருவில் நடைபெற்றது. மாலை 6 .50 மணிக்கு பாப்புலர் ப்ரன்ட் திருச்சி மாவட்ட தலைவர் S .அமீர் பாஷா தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது.
இதில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநில துணைத்தலைவர் M .முஹம்மது இஸ்மாயில் அவர்கள் "இட ஒதுக்கீடு ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநில செயலாளர் S .பைசல் அஹ்மத் அவர்கள் "சமூக மாற்றத்தில் நமது பங்கு" என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
No comments:
Post a Comment