கடந்த வியாழக்கிழமை (03.03.2011) அதிகாலையில் தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் அல் கலீல் பிரதேசத்தில் உள்ள நபி யூனுஸ் மஸ்ஜிதைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் ஒத்துழைப்போடு ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான தீவிரவாத யூத ஆக்கிரமிப்பாளர்கள் தல்மூதிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டதோடு, மஸ்ஜிதைக் கற்களாலும் பிற ஆயுதங்களாலும் தாக்கினர். அத்துடன், உள்ளூர் பலஸ்தீனர்களைப் புண்படுத்தும் வகையில் உரத்த குரலில் திட்டித் தீர்த்துத் தம்மை எதிர்க்க வருமாறு சவால் விடுத்துள்ளனர். எனினும், அவர்கள் தம்மை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முனைவதை உணர்ந்தவர்களாய் உள்ளூர்வாசிகள் பொறுமை காத்துள்ளனர்.
யூதச் சடங்குகள் யாவும் சுமுகமாக நிறைவேற்றப்படும்வரை நபி யூனுஸ் மஸ்ஜித் அமைந்துள்ள நகரத்தின் பிரதான நுழைவாயில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் பல மணிநேரம் மூடப்பட்டு பலத்த காவல் போடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், அல் கலீல் நகரத்தின் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடையொன்றை முற்றுகையிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதன் உரிமையாளர்களான இரு பலஸ்தீன் சகோதரர்களைக் கைதுசெய்துள்ளதோடு, அவர்களுக்குச் சொந்தமான கார் மற்றும் வாகன உதிரிப் பாகங்களையும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.
நன்றி
இந்நேரம்
No comments:
Post a Comment