Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, February 18, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



திருச்சி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் திருச்சியில்  " யூனிட்டி மார்ச் " என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான S.P.நஸ்ருதீன்  துவக்கவுரை நிகழ்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது சரியாக 3 மணியளவில் மரக்கடை ஸ்டார் தியேட்டர் அருகில்  துவங்கி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலையில் நிறைவு பெற்றது .தொடர்ச்சியாக பேரணியின் முடிவில் மாபெரும்  பொதுக் கூட்டம் நடைபெற்றது.


இப்பொதுக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் S.இல்யாஸ்  தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா  வரவேற்புரை ஆற்றினார் .  SDPI கட்சியின் மாநில செயலாளர் செய்யது இபுராஹீம் மற்றும் மதுரை , பெரம்பலூர் , புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்கள் , செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

ஒற்றுமை கீதம் பாடும் போது 


மாநில செயலாளர் S.இல்யாஸ் தலைமையுரையாற்றிய போது 


பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் A.முஹைதீன் அப்துல் காதர்  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் .

மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் சிறப்புரையாற்றிய போது 


திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளை சார்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள்  பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் 

 

நிகழ்ச்சியின்  நிறைவாக  பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப்  இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் M.அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார் . தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜீஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .

Saturday, February 16, 2013

திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிப்பரப்பு


திருச்சி,தாம்பரம் மற்றும் நாகர்கோவிலில் 17.02.2013 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற 
இருக்கும் " பாப்புலர் ஃப்ரண்ட் தினம் " மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேரடி 
ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .



திருச்சியில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.pfitrichy.blogspot.com

www.popularfrontnellai.com

www.popularfronttn.org

காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.ustream.tv/channel/pfikanchi

நாகர்கோவிலில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி மற்றும்
பொதுக்கூட்டத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://ibwnews.in/live_video_details.php?video

Tuesday, February 5, 2013

திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் யுனிட்டி மார்ச் சம்பந்தமாக நடந்த ஆழ்வார் தோப்பில் நடந்த மெகாபோன் பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம்.


04 feb:திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் யுனிட்டி மார்ச் சம்பந்தமாக நடந்த ஆழ்வார் தோப்பில் நடந்த மெகாபோன் 

பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம். திருச்சி:பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் 

பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தேசிய தலைமை முடிவு 

செய்துள்ளது .










அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 

வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி 

ஆழ்வார் தோப்பில் நடந்த மெகாபோன் பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம்.

Saturday, February 2, 2013

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய மது ஒழிப்பு பேரணி


திருச்சி : தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி ஜனவரி 30 அன்று SDPI கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் மது ஒழிப்பு பேரணி வெஸ்ட்ரி பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.


பேரணியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (CFI) மாநில துணை தலைவர் சாகுல் ஷஹித் துவக்கி வைத்தார் .இந்த பேரணியில் SDPI கட்சியின் மாநில செயலாளர்கள் K.S.இப்ராஹிம் மற்றும் நாஞ்சில் செய்யதலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .









திருச்சி மாவட்ட தலைவர் K.முபாரக் அலி தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா வாழ்த்துரை வழங்கினார் .மாவட்ட நிர்வாகிகள் ரஹ்மதுல்லாஹ் ,அப்துல் ரஹீம்,ரபிக் முஹம்மத் மற்றும் SDTU மாநில துணைத்தலைவர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, January 24, 2013

பெரம்பலூர் வி.களத்தூர் பிரச்சனை சம்பந்தமாக பாப்புலர் ஃ ப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய்


வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை 


நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மரக்கடை 


பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து 


கொண்ட மக்களின் ஒரு பகுதியினர்












Thursday, January 3, 2013

திருச்சி SDPI கட்சியின் 29 வது வார்டு கிளையில் புதிய உறுப்பினர்கள



திருச்சி:திருச்சி SDPI கட்சியின் 29 வது வார்டு கிளையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு கூட்டம் கிளை தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் s.s. ரஹமதுல்லாஹ்மற்றும் s.ரபிக் அஹமது மாவட்ட பொது செயலாளர் Y.அப்துல் ரஹீம் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர்.


இதில்  மாவட்ட தொழிற்சங்க தலைவர் பஷீர் அஹமது உடன் தொகுதி நிர்வாகிகள் A.அப்பாஸ் மற்றும் சித்திக் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் 10 நபர்கள் தங்களை SDPI கட்சியின் செயல் வீரர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.இறுதியாக கிளை செயலாளர் நன்றயுரையாற்றினர்.

டெங்கு தடுப்பு முகாம்-திருச்சி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பில் இன்று (28.12.12) பாலக்கரை பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.






Tuesday, January 1, 2013

மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்


வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
 அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! .
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை !
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்! நீண்டதொரு வரலாறு பொருமையுடன் அறிந்து கொள்வொம்..
ஊரும், பெயரும்
மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.
1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.
மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

அவுரங்கசீப்-இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்





அவுரங்கசீப்.இந்தியாவை ஆண்ட வலிமையான முகலாய பேரரசர்களுள் கடைசி.அவருக்குப் பின் சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடையத் துவங்கியது.

வெள்ளைக்காரன் வரலைனா இந்தியா என்ற நாடே உருவாகி இருக்காதுன்னு நம்ம பொது புத்தியில் உருவாகி உள்ள பிம்பம் முதலில் களையப்படவேண்டும்.டெல்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சாம்ராஜ்யங்களுள் மிகப் பெரிது அவுரங்கசீப் ஆண்ட இந்தியா தான்.வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே குமரி வரைக்கும்,மேற்கே ஆப்கானிஸ்த்தான் மற்றும் இன்றைய ஈரானின் ஒரு மாகாணத்தை உள்ளடக்கியும் கிழக்கே அசாம் வரையும் அவரது சாம்ராஜ்யத்தின் எல்லைகள் பரவி இருந்தது.இது நாள் வரையிலான உலகில் தோன்றிய சாம்ரஜியங்களில் முதல் ஐந்து பெரிய சாம்ராஜ்யங்களுள் அதுவும் ஒன்று.தவிர அன்றைய உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30% மக்கள் அவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தனர்.இன்றைய இந்திய மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 15% .

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவுரங்கசீப் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தாமே செய்த குல்லா,உடைகள் போன்றவற்றை விற்று பணம் ஈட்டி கொண்டு இருந்தார் என்று எல்லாம் படித்து இருப்போம்.இதன் மறுபக்கம் இன்னும் சுவாரஸ்யமானது.முஹலாய பேரரசர்களுள் மிகுந்த செல்வம் ஈட்டியவர் அவுரங்கசீப் தான்.அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தரும் அவரே.இருந்தும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார்.இதை விடவும் ஆச்சர்யம்,இன்று உள்நாட்டு உற்பத்தி கணக்கிடும் GROSS DOMESTIC PRODUCTION எனப்படும்GDP 9% ஆக இருக்க அரசாங்கம் திட்டம் தீட்டி 6% ஆக குறைந்து விட்டது என புலம்பி வருகிறது அல்லவா? அவுரங்கசீப் ஆண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் மலைக்க வைக்கும் விதமாக 30%ஆக இருந்துள்ளது.இன்று வரை உலகின் எந்த நாடும் இந்த சாதனையை முறியடிக்க இயலவில்லை.சீனாவை விடவும் பலமடங்கு வேகத்தில் அப்போது இந்தியாவின் வளர்ச்சி இருந்து உள்ளது.

Monday, December 31, 2012

SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்


திருச்சி காஜா மலையில்  SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/12/2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கட்சியின் வருங்கால திட்டத்தையும் மேலும் எவ்வாறு கட்சியின் பணியை முன்னெடுத்து செல்வதை பற்றியும் விவாதிக்கபட்டது.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கட்சியின் செயல் வீரர் அடையாள அட்டைவழங்கப்பட்டது.