Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, June 16, 2011

மாபெரும் மணற் தடையை நிறுவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

  கடந்த வியாழக்கிழமை (09.06.2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் கான் யூனிஸ் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குஸா நகர நுழைவாயிலருகே மாபெரும் மணற் தடையொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் புல்டோஸர்கள் பயன்படுத்தப்பட்டதோடு, மூன்று யுத்த தாங்கிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.  மேற்படி மணற் தடையை நிர்மாணித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளை உள்ளூர்வாசிகள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அப்பகுதியையே ஒரு புகைமண்டலமாக்கியதாக ஸஃபா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

எதிர்பாராதவிதமாக பலஸ்தீன் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல், யுத்த தாங்கிகள் புடைசூழச் சென்று புல்டோஸர்களால் பலஸ்தீன் பொதுமக்களின் வீடுகள், பயிர்நிலங்களை இடித்து நிர்மூலமாக்குதல் முதலான நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களான பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டக்கூடிய வகையில் செயல்படுதலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனம் பொறுக்கமுடியாமல் கொதித்தெழும் மக்களைக் குற்றவாளிகளாக்கிக் கைதுசெய்வதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வாடிக்கையாகும் என உள்ளூர் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
                                                                                         நன்றி 
                                                                                   இந்நேரம்

No comments:

Post a Comment