Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, September 22, 2011

மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்

mallika-sarabhai
கோழிக்கோடு:அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல் ஒரு அரசியல் நாடகம் என்று பிரபல நடன கலைஞரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கூறியுள்ளார்.
‘அது நீதியின் போராட்டம் அல்ல, அது  அநீதியின்  போராட்டம். சமாதானம் அமைதியை குறித்து இப்போது பேசுவதற்கு மோடிக்கு எவ்வித தகுதியுமில்லை.
திடிரென்று இதுக் குறித்து பேசவேண்டிய அவைசியம் என்ன? இந்திய அரசியலில் முன்னிலையில் நிற்பதற்குண்டான சுய விளமபரத்திற்காகத் தான் இந்நாடக அரங்கேற்றம்’ என்றார்.
’10௦ வருடங்களாக குஜராத்தில் மோடியின் சர்வாதிகார ஆட்சிதான் நடந்து வருகிறது. அங்கு முஸ்லிம்களும் தலித் மற்றும்  பழங்குடியினரும் தினம் தினம் பயந்து வாழ்ந்து கொண்டிரிக்கிறார்கள். அவர்களின் உயிர்களுக்கு எவ்வித உத்தரவாதிததவும் இல்லை. ‘குஜராத்தில் எங்கு அமைதியும் சமதானமும் இருக்கிறது?’ என அவர் ஆவேசத்துடன் வினவினார்?
‘அமைதிக்காக உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் முதலில் மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்திருக்க வேண்டும். இந்தியாவில் அதிகமாக கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படும் மாநிலங்களில் ஒன்றுதான் குஜராத். இரவு 10  மணிக்கு பின் பெண்கள் வெளியில் இறங்கி நடமாடமுடியாத மாநிலம்தான் குஜராத்.
நான் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இருந்து பின்வாங்க எனது வழக்கறிஞருக்கு 10 லட்சம் லஞ்சம் கொடுத்த மோடி இப்போது ஊழலுக்கு எதிராக வாய்கிளிய பேசுகிறார்’ என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்
நன்றி  
www .thoothuonline .com

No comments:

Post a Comment