Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Thursday, September 22, 2011

கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக திருச்சியில் நடந்த மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கேம்பஸ் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா மக்கள் உரிமைக்காக போராடுவோம்  தேசிய அளவிலான பிரச்சாரத்தின் இறுதியாக  திருச்சி மாவட்டத்தில்  சைக்கிள் பேரணி நடத்த தீர்மானித்து அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை"மாபெரும் விழிப்புணர்வு  சைக்கிள் பேரணி "வரை நடைபெற்றது .



நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் N.ஷேக் அப்துல்லாஹ் B.COM தலைமையேற்று நடத்தினார்.










நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொதுசெயலாளர் Z .முஹமது தம்பி B.A.B.L கொடி அசைத்து துவங்கி வைத்தார் .அதற்கு முன்னர் அவர் பேசியதாவது இந்த "மக்கள் உரிமைக்காக போராடுவோம் " என்ற பிரச்சாரத்தின்  நோக்கம் என்ன அதை நாம் ஏன் கையிலெடுதோம் என்பதை விலக்கி கூறினார் இந்தியாவில் இருக்கும் இரட்டை நீதியையும் தெளிவாக எடுத்துரைத்தார்  








சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  திருச்சி மாவட்டதலைவரும் சோசியல் டெ மா

க்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்  (SDPI)அரசியல் கட்சியின் மாவட்டதலைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .






பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர்A.அமீர் பாஷா M .COM   பேசும்போது மக்கள் உரிமை இன்றைய இந்தியாவில் எவ்வாறு  உள்ளது இந்தியாவில் முஸ்லிம்கள் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் எதிராக நடக்கும் அநியாயங்களை அவர் எடு

த்

துரைத்து பேசினார் .

           


சோசியல் டெ மாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்  (SDPI)கட்சியின் மாவட்ட தலைவர் K . முபாரக் அலி பேசும்பொழுது இந்த நாட்டில் ஊழல் எவ்வாறு மலிந்து விட்டது நரபலி நரேந்திர மோடி ன் மத நல்லிணக்க உண்ணாவிரத நாடகத்தையும் கடுமையாக சாடினார் மேலும் அரசு ஒரு சார்பாக நடந்து கொள்ளும் விதத்தையும் மாணவர்கள் எவ்வாறு இந்த நாட்டுக்கு பக்க பலமாக விளங்கவேண்டும் என்றும் குறித்தும் பேசினார் .



கேம்பஸ் ஃப்ரண்ட் -ன் மாநில செயலாளர் A .ராஜா முஹமது M.A.B.L  அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்புரையாற்றினார் அவர் பேசும்பொழுது இன்றைய இந்தியாவில் இருக்கும் ரெட்டை நீதியையும் அரசாங்கத்தின் ஒற்றை சார்ந்த நிலையையும் சாடி பேசினார் ,அன்னா ஹசாரே வின் போரட்டத்திற்கு கொடுத்து முக்கியத்துவத்தை மத்திய அரசு ஏன் 12 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் மணிப்பூர் இரோம் ஷர்மிலா பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றும் மேலும் தமிழக காவல்துறை பரமக்குடியில் தலித்துகளுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூட்டையும் கண்டித்தார்,இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதை எடுத்துரைத்தார் .



நிகழ்ச்சியின் இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் -ன் மாவட்ட செயலாளர்               A .அப்துல் வாரீஸ் B.Eஅவர்கள் நன்றியுரையாற்றினார்   



 இதில் பிரச்சாரத்தின் நோக்கம் என்ன என்பதை துண்டு பிரசுரமாக மக்களுக்கு விநியோகிக்கபட்டது .இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள் மிகுந்த ஆதரவு தந்தார்கள் மேலும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர் .

          

No comments:

Post a Comment