திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,
நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள்
தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை 6 பேர்
வரை இறந்ததாக சொல்ல படுகிறது.வெள்ள பெருக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்ய
பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI நேரடியாக களத்தில் குதித்தது.பாதிக்க பட்ட வீடுகளில்
அரசாங்கம் உதவியை எதிர்பார்க்காமல் தாமாக முன் வந்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும்
SDPI கள பணியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.இந்த செயலை அங்குள்ள மக்கள்
வெகுவாக பாராட்டினர்
திருப்பூரில் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்
மாநில தலைவர் ஆறுதல்
திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும்
பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி,உணவு கிடைக்காமல் மிகவும்
அவதி பட்டனர் .இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI அவர்களை கல்யாண
மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது.வெள்ள
நிவாரண முகாமில் பாதிக்க பட்டவர்களுக்கு ஆறுதல் கூற பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்
A .S . இஸ்மாயில் மற்றும் SDPI இன் மாநில பொதுசெயலாளர் S .M .ரபீக் அஹ்மத் ஆகியோர்
சென்றனர் .அங்கு அவர்களுக்கு தேவையான் நிவாரண உதவிகளை செய்வதாக
வாக்குறுதி அளித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட்டின் உதவிகளை அறிந்து அங்குள்ள மக்கள் மிகுந்த
சந்தோஷம் அடைந்தனர்.
![]() |
திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் SDPI தொண்டர்கள் |
![]() |
SDPI மற்றும் POPULAR FRONT சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் |
![]() |
திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் SDPI ன் மாநில பொதுச்செயலாளர் S .M ரபீக் அஹ்மத் |
No comments:
Post a Comment