Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, January 31, 2012

கூடங்குளம் போராட்டக்கா​ரர்கள் மீது இந்து முன்ன​ணி தீவிரவாதிக​ள் தாக்குதல் – ​10 பேர் கைது

kudankulam-nuclear-plant-295
திருநெல்வேலி:இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை முறியடிக்க ராமர் பாலம் என்ற பொய்யை பரப்பி அத்திட்டத்தை சீர்குலைத்தார்கள்.

கூடன் குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீதான தாக்குதல் ! போராட்டத்தை திசை திருப்பி கலவரத்தை தூண்டும் செயல் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.!


பத்திரிக்கை செய்தி 

கூடன் குளம் அணு உலை எதிர்ப்பு 
போராட்டக்குழுவினர் மீதான தாக்குதல் !
போராட்டத்தை திசை திருப்பி கலவரத்தை தூண்டும் செயல் 
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.!

கூடன் குளம் அணு உலைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். இன்னும் 106 வது நாளாக இடிந்த கரை கிராமத்தில் அகிம்சை வழியில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்ட குழுவினர் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. 
அமைதியாக நடைபெற்று வரும் போராட்டத்தை திசை திருப்பி கலவரக் காடாக்கும் இந்து முன்னணியின் முயற்சியே இது. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். காங்கிரசும், இந்து முன்னணியும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

Wednesday, January 25, 2012

மும்பை குண்டுவெடிப்பு: கைதானது உண்மையான குற்றவாளிகளா?

Home_Ministry_A13825
புதுடெல்லி:கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை அரசு புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் மோதலை உருவாக்கியுள்ளது. இவ்வழக்கில் நகீ அஹ்மத் என்ற டெல்லியைச் சார்ந்த இளைஞரை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கைது செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பைக் குண்டுவெடிப்பு தொடர்பாக நகீ அஹ்மத் வஸீ அஹ்மத் ஷேக், நதீம் அக்தர் அஷ்ஃபக் ஷேக் ஆகிய இரண்டு இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக விசாரணையில் திருப்புமுனையை இக்கைது ஏற்படுத்தியுள்ளதாகவும் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா நேற்று அறிவித்தார்.

Saturday, January 21, 2012

பிரான்ஸ்:பர்தா அணிந்தவர்களை விசாரித்த பெண் போலீஸார் இஸ்லாத்தை ஏற்றனர்


‘இஸ்லாமியப் பயங்கரவாதிகளால்‘ ஆளப்படுகிறது – அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெரி


Rick Ferry

அமெரிக்க குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரிக் பெரி, துருக்கி இஸ்லாமியப் பயங்காரவாதிகளால் ஆளப்படுகிறது என்று அதிரடியாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

யூத சார்பான அமெரிக்க தொலைக்காட்சியான பொக்ஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘‘ரிக் பெரி ஒரு முட்டாள்‘‘ என துருக்கியின் பிரபலமான நாளிதழான ஹுர்ரியத்தில் கட்டுரை எழுதியுள்ள முஸ்தபா அய்கல் காரசாரமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி


 எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள்  நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்ததடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று  எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர்.சிலர் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படாமல் காலம் கடத்தும் கைங்கரியம் மக்கள் எழுச்சி ஏற்படும் வரையில் இருந்து வந்துள்ளது .

Friday, January 20, 2012

உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா?


fatbody

* ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர்; தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.
* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். வீரிய விருத்தியும் உண்டாகும்.
* பருத்த உடல் கறைந்து கெட்டிப்பட நில ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி, துணியில் சலித்து, ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும். தன்னில் தானே, உடல் வற்றிக் கெட்டிப்படும்.

பங்களாதேஷ்:அரசை கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிப்பு

Brigadier General Muhammad Masud Razzaq talks during a media briefing in Dhaka January
டாக்கா:ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்ற சில உயர் ராணுவ அதிகாரிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.
ராணுவத்தில் பணியாற்றும் சில தீவிர சிந்தனையை கொண்ட பதினாறுக்கும் மேற்பட்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்தார்.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் கொலைகளை கண்டித்து மணிப்பூரில் எஸ்.டி.பி.ஐ பேரணி

sdpi
இம்பால்:நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கொலைச் செய்ததை கண்டித்து சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பேரணி நடத்தியது.
இஸ்ஹாக் அலி(வயது 25), முஸ்தகீம்(வயது 24) ஆகிய இளைஞர்களின் படுகொலைக் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பேரணியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tuesday, January 17, 2012

பாட்லா ஹவுஸ்:காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிக்கிறது – முலாயம்சிங்

muyalam17 Jan 2012


லக்னோ:பாட்லா ஹவுஸ் சம்பவம் தொடர்பாக பரஸ்பரம் மாறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டு காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிக்கிறது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியிருப்பது: வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என கூறும் திக்விஜய்சிங்கை காங்கிரஸ் கட்சி ஒன்று கட்சியில் இருந்து நீக்கவேண்டும். அல்லது என்கவுண்டர் உண்மையானது என கூறும் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள் தொடர்பான எவ்விவகாரத்தையும் காங்கிரஸ் முக்கியத்துவமாக கருதாது. ஆகையால்தான் தேர்தல் வரும் சூழலில் பாட்லா ஹவுஸ் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

Monday, January 9, 2012

முர்ஷிதாபாத்தில் 10 கிராமங்களை பாப்புலர் ஃப்ரண்ட் தத்தெடுத்தது

Popular Front Chairman E M Abdulrahman declares 10 villages in Murshidabad as Sarva Shiksha Gram
முர்ஷிதாபாத்:மேற்குவங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பத்து கிராமங்களை சர்வ ஷிக்‌ஷா கிராமங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தத்தெடுத்ததாக சேர்மன் இ.எம்.அப்துற்றஹ்மான் அறிவித்துள்ளார்.
10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஸ்கூல் கிட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சியை அவர் துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் தவுலாதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பட்டதாரி மாணவர்களுக்கான இரண்டாவது கட்ட கல்வி உதவித் தொகையை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் நிகழ்ச்சியிலும் இ.எம்.அப்துற்றஹ்மான் கலந்துக் கொண்டார்.

லவ் ஜிஹாத்:இந்த அனுபவம் யாருக்கும் வரக்கூடாது – அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷா

லவ் ஜிஹாத்
பத்தணம்திட்டா(கேரளா):’எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே நன்றி. சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.
லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் ஹிந்து ஜாக்ருதி டாட் காம் செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கேரள போலீசார் கண்டுபிடித்தனர். இச்செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிநாட்டில் பணியாற்றிவரும் ஷாஹின்ஷா தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“பத்தணம்திட்டாவில் ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரியில் நான் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பயிலும் இதர சமூகங்களை சார்ந்த மாணவிகளை திருமணம் புரிந்ததால் என்னையும், எனது நண்பர் சிராஜுத்தீன் என்பவரையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர். 2009 ஆகஸ்ட் மாதம் இச்சம்பவம் நடந்தது.

Thursday, January 5, 2012

ஈரானுக்கு துருக்கி, சீனா ஆதரவு

56318_NpAdvCatPG
டெஹ்ரான்:ஈரான் மீதான ஒருதலைபட்ச தடையை திணிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சட்டங்களை சர்வதேச சட்டங்கள் மீது திணிக்கும் வேலையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்வதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹோங் லெ தெரிவித்துள்ளார். ஈரானுடன் பொருளாதார ரீதியான உறவு தொடரும். மேலும் எரிசக்தி துறையிலும் உறவு தொடரும் என அவர் கூறியுள்ளார்.

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது

Sri Ram Sene members held for hoisting Pak flag
பெங்களூர்:கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.

Monday, January 2, 2012

வேலை இல்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி திட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வேலை இல்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சியும் மற்றும் கன ரக ஓட்டுனர் பயிற்சியும் அளிக்கபடுகிறது .

மேற்கொண்டு விபரங்கள் படத்தில் உள்ளது.


கல்வி தகுதி :8 வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்  .


visit : www .tn .gov .in

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


அஸ்ஸலாமு அழைக்கும்

இணையத்தள சகோதரர்க்கு இதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

அண்ணலார் அருளிய அடிப்படை தத்துவம்

manathodu-manathai1-270x138
“இந்த மார்க்கத்தை அல்லாஹ் வெற்றி பெறச் செய்வான். நாம் உன்னத நிலையை அடைவோம். ஸன்ஆவிலிருந்து ஹழர மவ்த் வரை அல்லாஹ் அல்லாத வேறொன்றையும் பற்றி அச்சப்படாமல் ஒருவன் பயணம் செய்யும் அளவுக்கு அமைதி மலரும். நீங்கள் அவசரப்படுகின்றீர்கள்.”
கப்பாப் இப்னு அரத் (ரலி) என்ற நபித்தோழரை கருணை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி ஆறுதல் படுத்தினார்கள்.

7 இந்திய மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகிறது இஸ்ரேல்


ஜெய்ப்பூர்:விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கும் மத்தியக்கிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேல் இந்தியாவில் கால்பதிக்கிறது. ஏழு மாநிலங்களில் 2012-ஏப்ரல் மாதம் விவசாய திட்டத்தை துவக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.


ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மஹராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் இத்திட்டத்தின் தலைவர் யஹேல் விலன் அறிவித்துள்ளார்