Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Wednesday, January 25, 2012

மும்பை குண்டுவெடிப்பு: கைதானது உண்மையான குற்றவாளிகளா?

Home_Ministry_A13825
புதுடெல்லி:கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை அரசு புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் மோதலை உருவாக்கியுள்ளது. இவ்வழக்கில் நகீ அஹ்மத் என்ற டெல்லியைச் சார்ந்த இளைஞரை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கைது செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பைக் குண்டுவெடிப்பு தொடர்பாக நகீ அஹ்மத் வஸீ அஹ்மத் ஷேக், நதீம் அக்தர் அஷ்ஃபக் ஷேக் ஆகிய இரண்டு இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக விசாரணையில் திருப்புமுனையை இக்கைது ஏற்படுத்தியுள்ளதாகவும் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா நேற்று அறிவித்தார்.

ஆனால் நகீயின் கைது செய்தி டெல்லியில் மத்திய புலனாய்வு ஏஜன்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. வழக்கின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் ஏ.டி.எஸ் தங்களின் வீழ்ச்சியை மறைக்க முயற்சிப்பதாக டெல்லி புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக நாட்டில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதாக மரியா நேற்று செய்தியாளர்களை சந்திக்கும்போது குறிப்பிட்டார்.
குற்றவாளிகளை கைது செய்வதற்கு தங்களுக்கு உதவியவர் நகீ அஹ்மத் என டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவும், ரகசிய புலனாய்வு பிரிவின் சிறப்பு பிரிவும் கூறுகின்றன. குற்றவாளிகளை குறித்து தங்களுக்கு தகவல் அளித்ததற்காக மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் நகீ அஹ்மதை கைது செய்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கிய நபர்களை கைது செய்ய தங்களுக்கு உதவுவதற்காகவே நகீ அஹ்மத் மும்பைக்கு வந்தார் என டெல்லி புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்திய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவிய நகீயின் கைது, புலனாய்வு அமைப்புகள் இடையேயான போட்டி, பொறாமைக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞன் பலிகடாவாக மாற்றப்பட்டுள்ளான் என்பதை வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment