Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Saturday, January 21, 2012

எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி


 எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள்  நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்ததடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று  எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர்.சிலர் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படாமல் காலம் கடத்தும் கைங்கரியம் மக்கள் எழுச்சி ஏற்படும் வரையில் இருந்து வந்துள்ளது .

ஹிஜாப் தடைக்கு எதிரான முதல் தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது. எகிப்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த தடை இருந்து வந்துள்ளது. தொலைகாட்சி நிலையங்களில் தொழில் புரியும் பெண்கள் இஸ்லாமிய உடைகளை அணிவது தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது. தற்போது ஊடகத் துறையில் பட்டம் பெரும் 95 வீதமான பெண் ஊடகவியலாளர்கள் இஸ்லாமிய உடைகளைத்தான் அணிவதாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
தீனா சகரியா என்ற பெண் ஊடகவியலாளர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடுத்த வழக்கின் தீர்ப்பே தற்போது வழங்கபட்டுள்ளது. சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவியில் இருந்தால் இந்த தீர்ப்பு வழங்கப்படாமலே காலம் கழிந்து கொண்டிருக்கும் என்று எகிப்து மக்கள் கருத்துரைத்துள்ளனர்.

No comments:

Post a Comment