2 Aug 2012
புனே:மஹராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தை நேற்று பீதியில்ஆழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் டிஃபன்ஸ் பாக்ஸில் வெடிக்குண்டை எடுத்துச் சென்றபொழுது வெடித்ததால் காயமுற்று சிகிட்சை பெற்றுவரும் உள்ளூர் டெய்லரான தயானந்த் பாட்டீல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய பகுதியில் நேற்றிரவு, நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், புனே நகரமே அதிர்ச்சிக்கு உள்ளானது. பாலகந்தர்வா கலையரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் தேனா வங்கி அருகிலும், கார்வாரே சவுக் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வரிசையாக சக்தி குறைந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், குப்பைத் தொட்டியில் ஒரு குண்டும், சைக்கிள் கேரியரில் ஒரு குண்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.