எகிப்திய மாநில பாதுகாப்பு உச்ச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த ஒரு எகிப்திய வர்த்தகர் மற்றும் இரண்டு சியோனிஸ்டுகளுக்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது தாரிக் அப்துல் ரஸ்ஸாக் ஹுசைன் என்ற 37 வயதான எகிப்திய வர்தகருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு இவர் உளவு வேலை செய்தமைக்கு சீனாவில் இவருக்கு ஒரு வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது இவருடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு சியோனிஸ்டுகளுக்கு இஸ்ரேலிய மொசாட் உளவு அமைப்பின் உறுபினர்களாகும் என்று எகிப்து தகவகள் தெரிவிக்கின்றது. தாரிக் அப்துல் ரஸ்ஸாக் ஹுசைன் மொசாட் உறுபினர்களுடன் வேலை செய்த காலப்பிரிவில் அரபு உலகில் வாலிபர்களை இஸ்ரேல் மொசாட் உளவு அமைப்புக்கு முகவர்களாக உள்ளவாங்க முயன்று வந்துள்ளார் விரிவாக
இவர் தனது நடவடிக்கைகளை மிகவும் இரகசியமாக மேற்கொண்டு வந்துள்ளதுடன் அரபு முஸ்லிம் உலகின் ஊடகத் துறையில் உள்ளவர்களை மொசாட்டின் முகவர்களாக உருவாக்க முயன்று வந்துள்ளார்.
இவர் அரபு முஸ்லிம் உலகின் ஊடகத் துறையில் உள்ளவர்களை சீனா, தாய்லாந், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பாக பேச வருமாறும் அவர்களின் அனைத்து செலவுகளும் கவனிக்கபடுவதுடன் குறித்த நாட்டுக்கு வந்தவுடன் உடனடியாக அவர்களுக்கு கடன் அட்டை ஒன்றும் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை காட்டி ஊடக துறையில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.
இந்த சம்பவங்கள் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் எகிப்து மற்றும் அரபு முஸ்லிம் நாடுகளின் ஊடகத் துறை சார்ந்தவர்களை குறிவைத்து அவர்களை தமது முகவர்களாக உருவாக்க முயன்று வருவதை காட்டுவதாகவும் எகிப்தில் பல பிரமுகர்கள் மொசாட்டின் வலையில் சிக்கி அதற்காக வேலை செய்பவர்களாக இருக்க முடியும் என்ற சந்தேகத்தில் மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் மொசாட் அமைப்புக்கு முகவர்களாக உருவாக்கப் படுபவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக நிறுவங்களுக்கு சொந்த காரர்களாக உருவாக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
M.ரிஸ்னி முஹம்மட்
No comments:
Post a Comment