கடந்த 22/07/2006 அன்று கோவையை தகர்க்க சதி என்று மொத்த தமிழகத்தையும் பீதிக்குள்ளாக்கிய அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையராக இருந்த ரத்தினசபாபதி, சில பொருட்களைக் காட்டி முஸ்லிம்களை கைது செய்து சிறையிலடைத்தார்.
மக்களிடையே எழுந்த நீதிக்கான குரல்களின் விளைவாக சி.பி.சி.ஐ.டி யின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) வை விசாரிக்க உத்தரவிட்டது. சுமார் ஒரு வருட காலம் இவ்வழக்கை விசாரித்த சிட் "இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறியது"
ஆனால் நான்கு வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடந்த கால அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ரத்தினசபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களிடையே அதிர்ச்சியையும், மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே!
- முன்னால் உளவுத்துறை ஏ.சி. ரத்தினசபாபதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும்,
- சி.பி.சி.ஐ.டி -SIT சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும்,
- ரத்தினசபாபதி மற்றும் துணைபுரிந்த காவல்துறையின் மீது வழக்கு பதிவு செய்து, நீதியின் முன் நிறுத்தக் கோரியும்,
தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜூலை 22 அன்று மாலை 5 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.
SDPIயின் மாநில செயலாளர் சகோ. அபுபக்கர் சித்தீக் உரையாற்றுகிறார் |
இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI யின் மாநிலப் பொதுச் செயலாளர் A. அபூபக்கர் சித்தீக் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.
மேலும் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
No comments:
Post a Comment