கடந்த ஒருவார காலமாக பகரைனில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்நாடு மாநில செயற் குழு உறுப்பினரும் தேசிய மனித உரிமை கூட்டமைப்பின் (NCHRO) தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான அட்வகேட் . M .முஹம்மத் யூசுப் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் அட்வகேட்..
M.முஹம்மத் யூசுப் அவர்களை வரவேற்கும் முகமாக பகரைனில் பல்வேறு சமூக சேவைகளையும்,சட்ட உதவிகளையும் செய்துவரும் பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் (BIFF)--வரவேற்பு நிகழ்ச்சி BIFF ன் தமிழ்நாடு பிரிவு கடந்த 29.07.2011 அன்று இரவு 7.30 மணி அளவில் அனாரத் அரங்கத்தில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு BIFF ன் செயற்குழு உறுப்பினர் சகோதரர் .அப்துல் சத்தார் அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார் . அவரை த் தொடர்ந்து சகோதரர் .முகைதீன் அவர்கள் ரமளானின் சிறப்புகள் குறித்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ''ரமலான் மாதம் என்பது வெறும் இபாதத்துகளின் மாதம் மாத்திரமல்ல அது வெற்றிகளின் மாதம் என்றும் , இஸ்லாம் மேலோங்குவதற்காக அல்லாஹ் ரமளானில் தான் பல்வேறு வெற்றிகளை வழங்கினான் என்றும் அது போன்ற வெற்றிகளை
அல்லாஹ் நமக்கு தருவதற்கு ஏற்ற சமூகமாக நாம் மாற வேண்டும் என்றும் அதற்கு இந்த ரமலானை நாம் நல்ல ரீதியில் பயன்படுத்த வேண்டும்" என்றும் கூறினார்.
அவரைத் தொடர்ந்து BIFF ன் பொதுச்செயலாளர் ஜவாத் பாஷா அவர்கள் உரையாற்றினார் . அவர் தனது உரையில் " பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் என்பது ஜாதி , மத ,மொழி பேதமின்றி பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்காக சேவை செய்து வரும் அமைப்பு" என்பதை அழகான முறையில் எடுத்துரைத்தார் .மேலும் பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் வாயிலாக இதுவரை செய்த சமூகப் பணிகள் குறித்தும் விளக்கி பேசினார் .பின்னர் BIFF ன் கர்நாடக பிரதிநிதி இம்தியாஸ் மற்றும் கேரளா பிரதிநிதி ஹம்சா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அனைவரையும் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அட்வகேட் . M .முஹம்மத் யூசுப் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர் தனது உரையில் இந்தியாவில் முஸ்லிம் சமூகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும், அந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வான முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தல் மற்றும் முஸ்லிம் சமூகத்தை எல்லா (கல்வி, அரசியல், சமூக மற்றும் பொருளாதார) ரீதியிலும் சக்திப்படுத்துதல் என்ற இலட்சியத்தை அடிப்படையாக கொண்டு முஸ்லிம் சமூகத்தின் நட்சத்திரமாக பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா இந்தியா முழுவதும் செய்து வரும் பணிகள் குறித்து அழகிய நடையில் எளியமுறையில் எடுத்துரைத்தார் .
தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பல்வேறு களப் பணிகள் குறித்த CD ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரர்.ஹுசைன் அவர்கள் நன்றியுரை வழங்கினார் . நிகழ்ச்சியை சகோதரர்.முகைதீன் அவர்கள் தொகுத்து வழஙகினார். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துகொண்டார்கள். இரவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது .
No comments:
Post a Comment