திருச்சி ஆகஸ்ட் 17: ஆகஸ்ட் 15 அன்று நாடே சுதந்திர தினத்தை கொண்டா இருக்கும் வேளையில் அதனை கொண்டாட முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடவேண்டிய மகிழ்ச்சியான இந்த நன்னாளில் நாட்டையே பீதிக்குள்ளாக்கும் வகையில் செயல்படும் காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் சிறுபான்மியனருக்கு எதிரான காழ்புணர்ச்சி மற்றும் நீதிமன்றத்தை அணுகவிடாமல் செய்த சதியையும் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடந்தது .
இதை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
சகோ .முஜிப் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்
இதில் மாவட்ட தலைவர் s .அமீர் பாஷா அவர்கள் கண்டன உரையாற்றினர் மற்றும் SDPI -இன் மாவட்ட துணை தலைவரும் மாநில பேச்சாளருமான சம்சுதீன் அவர்களும் சிறப்புரையாற்றினார் .
No comments:
Post a Comment