Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, August 23, 2011

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்


ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

                                   
’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.
அரசின் பாரம்பரிய பொறுப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் பெருமளவில் பகிர்ந்தளிக்கும் சூழலில் ஹஸாரேவின் லோக்பால் மசோதா கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் முற்றிலும் தவிர்த்துள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுமக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ஊடகங்களையும், கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக ஹஸாரே இவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள ’யூத் ஃபார் இக்யுவாலிட்டி’ என்ற அமைப்புடன் ஹஸாரே குழுவினருக்கு தொடர்புள்ளது. இவ்வமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு கொக்கோ கோலா, லெமன்ப்ரதர்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து பெருமளவிலான பணம் கிடைக்கிறது.
ஹஸாரேவின் குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேசனிலிருந்து நான்கு லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளது. ஹஸாரேவின் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் ’இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன்’ என்ற அமைப்பு பெரும் இந்திய நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்றுவருகிறது. இப்பொழுது ஊழல் வழக்கிலும், இதர குற்றங்களிலும் சிக்கி விசாரணையை எதிர்கொள்பவர்களும் இதில் உட்படுவர்.
ஹஸாரே கைதுச் செய்யப்பட்டவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்குரிய உரிமைக்கான போராட்டமாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஆதரவு, போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் போஸ்கோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திரும்ப பெறுவதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.

நன்றி 
thoothuonline.com

1 comment: